இப்பதான் கல்யாண போட்டோ வந்தது... அதுக்குள்ள இப்படியாமே? அமலா பால் திருமணத்தில் நீடிக்கும் மர்மம்!
சென்னை: நடிகை அமலா பால் திருமணம் பற்றி புதிய பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால்.
ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.

திருமணம்
இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து இப்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிகர் பிருத்வி ராஜுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரில் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ் காரணம்
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை அமலா பாலும் ஏ.எல்.விஜய்யும் பிரிவதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று இயக்குனர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை அமலா பால் மறுத்திருந்தார்.

திருமணம்
இந்நிலையில், நடிகை அமலா பால், தான் ஒருவரைக் காதலித்து வருவதாகக் கூறி இருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன், அவரும் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அடுத்த சில நாட்களில், நடிகை அமலாபாலைத் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார், பவ்னிந்தர் சிங்.

போட்டோ நீக்கம்
அதனுடன் 'Wedding Throwback' என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

பிரிந்து விட்டனர்
இந்நிலையில் இதுபற்றி நடிகை அமலாபால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது. அதாவது அமலா பாலுக்கும் பவ்னிந்தர் சிங்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம், இருவரும் அறிமுகமாயினர். பின்னர் இருவரும் சில மாதங்களாகக் காதலித்தனர். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

உண்மை என்ன?
இதற்கு ஆதாரமாக, பவ்னிந்தரின் இன்ஸ்டாகிராமை அமலா பால் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் என்று கூறுகிறார்கள். அமலாபால் திருமணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அவரே சொன்னால்தான் தெரியவரும் என்பதால் அவர் பதிலுக்கு காத்திருக்கின்றனர். இந்த புதிய தகவல் தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











