பிகினியில் நாகினி.. பீச் ஞாபகம் வந்துடுச்சாம்.. பழைய நினைவலைகளில் மிதக்கும் மவுனி ராய்!
மும்பை: நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை மவுனி ராய், பீச்சை ரொம்பவே மிஸ் செய்கிறாராம்.
Recommended Video
இந்த லாக்டவுனில் ஒவ்வொரு நடிகையும், ஒவ்வொரு விசயத்தையும் மிஸ் செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீச்சில் பிகினியுடன் இருக்கும் தனது த்ரோ பேக் புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கி வருகிறார்.

ஷிவானி
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான நாகினி சிரீயலில் ஷிவானி எனும் நாகமாக நடித்து அசத்தியவர் தான் நடிகை மவுனி ராய். சின்னத்திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்த இவருக்கு சல்மான் கான், அக்ஷய் குமார் என முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பட வாய்ப்புகளை அள்ளிக் குவித்தனர்.

ஹீரோயினாக
சின்னத்திரையில் கலக்கி வந்த மவுனி ராய் 2018ம் ஆண்டு வெளியான அக்ஷய் குமாரின் ஸ்போர்ட்ஸ் பயோபிக் படமான கோல்ட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதுக்கான போட்டியிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாகவும் சில படங்களில் தலை காட்டி இருக்கிறார்.

பிகினியில் நாகினி
இந்த லாக்டவுனில் தோட்டக் கலை செய்வது, ஓவியம் வரைவது என நன்றாகவே தனது பொழுதை கழித்து வருகிறார் மவுனி ராய். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற பிகினியில் செம ஹாட்டாக தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

ரொம்பவே மிஸ் பண்றேன்
அது மட்டுமின்றி, கடற்கரையில் தனியாக இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு, இந்த லாக்டவுனில் பீச்சை தான் ரொம்பவே மிஸ் செய்வதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன், பீச்சில் செம்மையா நேரத்தை செலவிட வேண்டும் என்றும், அந்த நாள் சீக்கிரத்திலே வரும் என தான் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அள்ளுது லைக்ஸ்
சுமார் 12.6 மில்லியன் ரசிகர்கள் பட்டாளத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள மவுனி ராயின் பதிவுகளுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. நாங்களும் கடற்கரையை ரொம்பவே மிஸ் பண்றோம், க்ளோஸ் அப் பிகினி போட்டோவை போடுங்க, செம ஹாட் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிரம்மாஸ்த்ரா
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஷாருக்கான், நாகர்ஜுனா நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரம்மாஸ்த்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மவுனி ராய். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள அந்த படம், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











