என்ன சொல்றீங்க.. நாகினி நடிகை மெளனி ராய்க்கு ரகசிய திருமணமா? எப்போ, எங்கே, யாருடன் தெரியுமா?

மும்பை: நாகினி தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான மெளனி ராய் இந்த மாதம் ரகசியகமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நடிகை கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷலின் திருமணத்தை தொடர்ந்து பெரிய திருமண வைபவமாக மெளனி ராய் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நாகினி நடிகை

நாகினி நடிகை

இந்தியில் வெளியான நாகின் சீரியல் சன் டிவியில் நாகினி என டப் செய்யப்பட்டு வெளியானது. அதில், லீடு ரோலில் நடித்த மெளனி ராய் நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நாகினி சீரியல் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

பாலிவுட்டில் பிசி

பாலிவுட்டில் பிசி

2004ம் ஆண்டே ரன் எனும் இந்தி படத்தில் மெளனி ராயாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். சீரியலில் பிசியான அவர் நாகினி சீரியலின் வெற்றிக்குப் பின்னர் அக்‌ஷய் குமாரின் கோல்ட் படத்தில் கடந்த 2018ம் ஆண்டு லீடு ரோலில் நடித்து அசத்தினார். கேஜிஎஃப் படத்தின் இந்தி வெர்ஷனில் இடம்பெற்ற குத்தாட்ட பாடலுக்கு இவர் நடனமாடி இருந்தார். விரைவில் வெளியாகவுள்ள ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா படம் வரை இவர் நடித்துள்ளார்.

காதலருடன் திருமணம்

காதலருடன் திருமணம்

36 வயது நடிகையான மெளனி ராய் துபாயை சேர்ந்த தனது ஆண் நண்பரான சுராஜ் நம்பியாரை இம்மாதமே ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் எங்கே

திருமணம் எங்கே

மெளனி ராய் மற்றும் அவரது ரூமர் காதலர் சுராஜ் நம்பியார் இருவரும் துபாயில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என முன்னதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது துபாயில் இல்லை கோவாவில் தான் இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதற்காக மேற்கு கோவாவில் உள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ரெசார்ட்டையே புக் செய்து இருக்கிறார்களாம்.

திருமண தேதி

திருமண தேதி

வரும் ஜனவரி 27ம் தேதி கோவாவில் நடிகை மெளனி ராய் மற்றும் அவருடைய ஆண் நண்பர் சுராஜ் நம்பியாருக்கு படு சீக்ரெட்டான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஜனவரி 28ம் தேதி இருவரும் இணைந்து ஒரு நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக மெளனியின் நெருங்கிய நண்பரும் நடன இயக்குநருமான பிரதிக் உத்தேகர் மற்றும் ராகுல் ஷெட்டி டான்ஸ் பிராக்டீஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

Sai Pallavi காதலர் கூட நடந்த சுவாரசியங்கள் இந்த படத்துல இருக்கு | Nani, Pallavi, Shyam Singha Roy
கரண் ஜோஹருக்கு அழைப்பு

கரண் ஜோஹருக்கு அழைப்பு

கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமல் மிகவும் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், மணிஷ் மல்கோத்ரா மற்றும் முன்னாள் நடிகை ஆஷிகா கரோடியா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், திருமணத்தில் பங்குபெற விரும்புவோர் முன்னதாகவே கொரோனா தடுப்பூசி சான்றிதழை அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X