இதனாலத்தான் ஆர்யா கல்யாணத்துக்கு போகல.. நான் கடவுள் நடிகை பூஜா சொன்ன காரணம்!
சென்னை: தமிழ், சிங்களம், மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்தவர் பூஜா உமாசங்கர். இவர் ஜேஜே, அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆர்யாவும் பூஜாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஆர்யாவின் திருமணத்திற்கு வராதது குறித்து அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை பூஜா உமா சங்கர் தமிழ் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானது, உள்ளம் கேட்குமே என்ற படத்தில் தான். அந்த படம் வெளியாக கொஞ்சம் தாமதமானதால், இவர் இரண்டாவதாக மாதவனுடன் நடித்த ஜேஜே படம் வெளியானது. அந்த படம் பூஜாவிற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதைத்தொடர்ந்து தல அஜித்தை வைத்து சரண் மீண்டும் இயக்கிய அட்டகாசம் என்ற அட்டகாசமான படத்தில் நடிகை பூஜா அஜித்திற்கு ஜோடியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகை பூஜா உமாசங்கர்: இவ்வாறு நடித்த முதல் இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்த நிலையில், இவர் நடித்து வெளியாகாமல் இருந்து உள்ளம் கேட்குமே படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. அதில், ஷாம், ஆர்யா, அசின், லைலா, பூஜா போன்ற அனைவரும் இளம் கதாநாயகர்களாக இளமை துள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதில், காதல், நட்பு, பிரிவு, சோகம் என ஒரு கலவையான படமாக இருந்து படம் வெற்றி பெற்றது.
உள்ளம் கேட்குமோ மோர்: உள்ளம் கேட்குமே படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஆங்லோ இந்தியன் பெண் கேரக்டரில் பூஜா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்த பட்டியல், ஓரம் போ, நான் கடவுள் என அடுத்தடுத்து ஆர்யாவுடன் நடித்தார். நான்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்ததால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டன. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, சிங்கள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆர்யாவுடன் முதல் காட்சி: இந்நிலையில், நடிகை பூஜா உமாசங்கர் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், உள்ளம் கேட்குமே மோர் படத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சியில் தான் முதன் முதலில் ஆர்யாவை சந்தித்தேன். அது முதல்படம் என்பதால், நான் சரியாக நடிக்கவில்லை என்று என் முதுக்கு பின்னால் ஷாட் எடுத்தார்கள் அந்த முதல் காட்சியை என்னால் மறக்கவே முடியாது என்றார். அதே போல ஜே ஜே படத்தில் நடிக்கும் போது தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது, மாதவன் தான் தமிழ் கற்றுக்கொள் என்று ஊக்கம் கொடுத்தார் என்றார்.

இதுதான் காரணம்: மேலும், ஆர்யாவின் திருமணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை, நான் ஆஸ்திரேலியாவில் இருந்த போது ஆர்யா எனக்கு போன் செய்து இருக்கிறார். நான் அதை பார்க்க தாமதமாகிவிட்டது. அதற்குள் திருமணமே நடந்து விட்டது. அந்த திருமணத்திற்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று நடிகை பூஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











