மறுபடியும் பாலா படத்தில் பூஜா

By Sudha

சிங்களத்துப் படங்களில் தீவிரமாக நுழைந்து கொண்டதால் தமிழ் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை பூஜா தற்போது மறுபடியும் கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். அதுவும் தனக்கு ஏற்றம் கொடுத்த இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் பூஜா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எரியும் தணல் என்ற பெயரில் புதிய படத்தை பாலா இயக்கி வருகிறார். இதில் பூஜாவும் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பூஜாவுக்கு மேக்கப் டெஸ்ட்டையும் முடித்து விட்டார்களாம்.

இதை பூஜாவே தனது வாயால் சொல்லியுள்ளார். பூஜா கூறுகையில், சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தேன். பாலா சாரை சந்தித்தேன். ஸ்கிரீன் டெஸ்ட் பார்த்தார். அவருடன் மீண்டும் இணைவது திரில்லாக உள்ளது. புதிய படத்தில் எனது ரோல் குறித்து அவர் என்னிடம் விளக்கினார். இருப்பினும் இன்னும் நான் உறுதி செய்யவில்லை என்றார் பூஜா.

தற்போது பூஜா இலங்கையில்தான் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். பூஜா ஒரு இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தமிழில் நடித்துக் கொண்டிருந்தபோது பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி நடித்து வந்தார். தற்போது அவர் இலங்கைக்கே ஷிப்ட் ஆகி விட்டார். சிங்களத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் காதல், கல்யாணம் என்றெல்லாம் பேச்சு வந்தது. இருப்பினும் அதை பூஜா மறுத்தார்.

தமிழில் பல படங்களில் பூஜா நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது நான் கடவுள் படம்தான். பூஜாவால் இப்படியும் நடிக்க முடியுமா என்று அதிசயிக்கும் அளவுக்கு தன்னை வருத்திக் கொண்டு நன்றாக நடித்திருந்தார் பூஜா.

எரியும் தணல் பற்றி வேறு ஏதாவது தெரியுமா பூஜா என்று அவரிடம் கேட்டால், இது பாலா படம். நான்கடவுள் படத்தில் அசம்வல்லி என்ற கேரக்டர் எப்படி எனக்கு அருமையாக அமைந்ததோ கண்டிப்பாக அதேபோல இதிலும் இருக்கும் என்று உணர்கிறேன். இதற்கு மேல் விரிவாக சொல்ல முடியாது. படத்தில் நாயகிகளில் ஒருவராக வேதிகா நடிக்கிறார். படத்தில் ஒப்பந்தமான பிறகுதான் முழு விவரமும் எனக்குத் தெரியும் என்று நழுவினார்.

தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள குசா பபா என்ற இந்தியப் படம் ஒன்றில் பூஜா இளவரசி வேடத்தில் நடித்துள்ளாராம். அது முடிந்து விட்டதைத் தொடர்ந்து தற்போது பாலா படத்திற்குத் திரும்பி வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X