'ஜாக்பாட்': வென்றார் நதியா!

குஷ்புவால் பிரபலமடைந்த நிகழ்ச்சி ஜாக்பாட். அந்த நிகழ்ச்சியை விட குஷ்பு அணிந்து வரும் ஜாக்கெட்டுகள்தான் ரொம்ப பிரபலம். ஆனால் திடீரென குஷ்பு திமுகவில் போய்ச் சேர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெயா டிவி குஷ்புவை அந்த நிகழ்சசியிலிருந்து தூக்கி விட்டது.
குஷ்புவின் ஜாக்பாட்டை யார் அடுத்து நடத்தப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குஷ்பு ரேஞ்சுக்கு பலரையும் நேயர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நதியா வந்து சேர்ந்தார்.
குஷ்பு போல கவர்ச்சிகரமான ஜாக்கெட் போடாமல் இயல்பான தோற்றத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் நதியா. இதனால் நிகழ்ச்சி உப்புச் சப்பில்லாமல் போயுள்ளதாம். இதனால் நதியாவை மாற்றி விட்டு அவருக்குப் பதில் நமீதாவை நிகழ்ச்சித் தொகுப்பாளராக்க ஜெயா டிவி தீர்மானித்ததாக தெரிகிறது.
நமீதா வசம் இந்த நிகழ்ச்சியைக் கொடுத்தால், குஷ்பு மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை விட மிகப் பெரிய புகழை ஜாக்பாட் பெறும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணம். ஆனால் இப்போது திடீரென நதியாவே தொடர்ந்து நடத்தட்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications