Abhinaya Marriage: ப்பா.. மணமகளாக மின்னுகிறாரே அபிநயா.. மண மேடையில் மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: மாற்றுத்திறனாளி என்பதே தெரியாத அளவுக்கு தனது திறமையால் பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நாடோடிகள் அபிநயா நேற்று திருமணம் செய்த நிலையில், அவரது திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
33 வயதாகும் நடிகை அபிநயா நடிகர் விஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், அதற்கு உடனடியாக பேட்டி ஒன்றின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், தனது 15 வருட காதலரை கடந்த மாதம் நிச்சயம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மெஹந்தி, சங்கீத் என வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த அபிநயா நேற்று தனது காதலரை கரம் பிடித்து திருமணம் செய்துக் கொண்டார். தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நடிகை அபிநயாவுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வரிசையாக பிரபலங்களின் திருமணங்கள்: ஏப்ரல் மாதம் திடீரென பிரபலங்களின் திருமண மாதமாகவே மாறிவிட்டது. விஜே பிரியங்காவின் திருமணம் நேற்று திடீரென நடைபெற்று ரசிகர்களை சர்ப்ரைஸ் ஆக்கியது. அமீர் மற்றும் பாவனி இருவரும் வரும் 20ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில், நடிகை அபிநயாவின் திருமணமும் நடைபெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே கல்யாண செய்திகளாக வந்து சினிமா ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறது. நடிகை ஜனனி ஐயரும் நிச்சயம் செய்துக் கொண்ட அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருந்தார்.
அபிநயா திருமணம்: கார்த்திக் என அழைக்கப்படும் சன்னி வர்மாவை நடிகை அபிநயா கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதி நிச்சயம் செய்துக் கொண்டார். நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த அபிநயாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் அபிநயா திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான வரவேற்பு விழா வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அழகான மணமகள்: தெலுங்கில் 2008ம் ஆண்டு வெளியான நேனிந்தே படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா தமிழில் சசிகுமார் ஹீரோவாக நடித்து சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, ஜீனியஸ், வீரம், தனி ஒருவன், மார்க் ஆண்டனி என பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். கடைசியாக ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்த பணி படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். மணமேடையில் அழகான மணமகளாக அலங்கரிக்கப்பட்டு இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் அபிநயாவின் அழகை பார்த்து பலரும் பொறாமைப்படும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளார்.
மாப்பிள்ளையை பாருங்க: பட்டு வேட்டி சட்டையில் அபிநயாவின் அழகுக்கு சற்றும் குறைவில்லாமல் கார்த்திக் மாப்பிள்ளை முறுக்கோடு மணமேடைக்கு வந்த காட்சிகளும் அபிநயாவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்ட நிலையில், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சில குறைகளை குறிப்பிட்டு அபிநயா போன்ற பலரை இந்த சமூகம் ஒதுக்கி வரும் நிலையில், அவருக்குள் இருக்கும் நிறைகளை பார்த்து பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திருமணமும் செய்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











