Abhinaya Engagement: ’நாடோடிகள்’ அபிநயாவை கட்டிக்கப்போறவரு இவர்தான்.. மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: சமுத்திரகனி இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான 'நாடோடிகள்' படத்தில் நடித்த நடிகை அபிநயாவால் வாய் பேச முடியாது, ஆனால், அவரது நடிப்புத் திறமையை பார்த்து அப்போதே ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ஆயிரத்தில் ஒருவன், சூர்யாவின் 7ஆம் அறிவு, ஈசன், ஜீனியஸ், வீரம், தனி ஒருவன், குற்றம் 23, சீதா ராமம், மார்க் ஆண்டனி, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் அபிநயா சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக அறிவித்து வெறும் மாப்பிள்ளையின் கை போட்டோவை மட்டும் வெளியிட்ட நிலையில், தற்போது மாப்பிள்ளை யார் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஷால் உடன் அபிநயாவுக்கு காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்திகள் கிளம்பிய நிலையில், அதெல்லாம் இல்லைங்க விஷால் என்னுடைய நல்ல நண்பர் என்று சைகை மொழியில் பதிலளித்த அபிநயா சிறு வயதில் இருந்தே தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்து வருவதை முதன் முறையாக வெளிப்படுத்தினார்.

Abhinaya introduces her fiancee to the worlds and shares photos

இந்நிலையில், அவரை நிச்சயம் செய்துக் கொண்டு கூடிய சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகும் அந்த அதிர்ஷ்டக்காரர் யார் என்பது குறித்து அபிநயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலமாக பார்க்கலாம் வாங்க..

அபிநயாவை கட்டிக்கப்போறவரு இவர்தான்: நடிகை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தனது நீண்ட நாள் காதலர் சன்னி வர்மாவை ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், வெறும் இருவரது மோதிரம் அணிந்த கைகளை மட்டும் காண்பித்த அபிநயா தற்போது கட்டிக்கப் போகிறவரின் முகத்தையே காட்டியுள்ளார்.

Abhinaya introduces her fiancee to the worlds and shares photos

நிச்சயதார்த்தம் முடிந்தது: நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜய் வசந்துக்கு ஜோடியாக அறிமுகமான அபிநயா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தில் ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்திருந்தார். சன்னி வர்மா என்பவரை காதலித்து வந்த அபிநயா கடந்த மார்ச் 9ம் தேதி அவருடன் நிச்சயம் செய்துக் கொண்டார். தற்போது நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். அபிநயாவுக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Abhinaya introduces her fiancee to the worlds and shares photos

ஜோஜூ ஜார்ஜ் மாதிரியே இருக்காரே: பணி படத்தில் வரும் ஹீரோ ஜோஜு ஜார்ஜ் போலவே உங்க காதலர் இருக்காரே என ரசிகர்கள் அபிநயாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல வருடங்களாக அபிநயா இவரைத்தான் காதலித்து வருகிறார் என்றும் இந்த மாதம் நிச்சயம் ஆன நிலையில், கூடிய சீக்கிரமே திருமண தேதியை அபிநயா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிருணாள் தாகூர் வாழ்த்து: நடிகை அபிநயா சீதா ராமம் படத்தில் நடித்த நிலையில், மிருணாள் தாகூர் உடன் நல்ல தோழியாகவே பழகி வருகிறார். அபிநயா தனது காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், உடனடியாக நடிகை மிருணாள் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அபிநயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் தற்போது அபிநயா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X