பரபரக்கும் கட்டிட வேலைகள்... பளபளக்கும் சுவர்கள்... கோவாவில் பங்களா கட்டுகிறாராமே சமந்தா
சென்னை: நடிகை சமந்தா, கோவாவில் பிரமாண்ட பங்களா கட்டி வருவதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
Recommended Video
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.
தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். தெலுங்கு படம் ஒன்றில், நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார்.

திருமணத்துக்கு பின்
சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னும் நடிகை சமந்தா நடித்துவருகிறார். இவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது.

கோவா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் கோவாவுக்குப் பறந்துவிடுவார்கள். சமீபத்தில் கூட புத்தாண்டை அவர்கள் கோவாவில்தான் கொண்டாடினர். இந்நிலையில் இவர்கள் கோவாவில் தனியாக இடம் வாங்கி பங்களா கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

கட்டிட பணிகள்
பளபளக்கும் சுவர்களுடன் இந்தப் பங்களாவின் கட்டிட வேலைகள் பரபரப்பாக நடந்து வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இதன் பணிகள் முடிவடையும் என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமா
இவர்கள் வாங்கியுள்ள இடத்துக்கு அருகிலேயே பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் இடம் வாங்கியுள்ளதாகவும் அவர்களும் அங்கு பங்களா கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரூ.8 கோடி
நடிகர் நாக சைதன்யா. ஒரு படத்துக்கு ரூ.8 கோடியும் நடிகை சமந்தா ஒரு படத்துக்கு சுமார் 2 கோடியும் சம்பளமாக வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











