நீங்க என்ன நினைக்கிறீங்களோ சொல்லுங்க.. நேரடியாக கேட்ட சமந்தா.. நாக சைதன்யாவின் ரியாக்‌ஷன் இதுதான்

சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பெரிய ரவுண்டு வந்தவர். அங்கு நடித்தபோதுதான் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே முடிந்தது. இப்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கலக்கிவந்த சமந்தா தெலுங்கிலும் கால் பதித்தார். அப்போது நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதலில் இந்தக் காதலுக்கு சைதன்யாவின் குடும்பம் பச்சை கொடி காண்பிக்கவில்லை. பிறகு நாக சைதன்யா இருந்த உறுதியை பார்த்து திருமணத்துக்கு ஒத்துக்கொண்டது. அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் பிரமாண்டமாக இரண்டு பேரின் திருமணம் நடந்தது.

naga chaitanya samantha

தொடர்ந்து நடிப்பு: பொதுவாக திருமணமாகிவிட்டால் சினிமாவிலிருந்து நடிகைகள் ஒதுங்குவது வழக்கம். ஆனால் சமந்தாவோ தனது நடிப்பை திருமணத்துக்கு பிறகு விடவில்லை. சமந்தாவின் அந்த முடிவுக்கு நாக சைதன்யாவும் சப்போர்ட் செய்தார். அதேசமயம் திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பதை நாகார்ஜுனா தரப்பு விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார்.

பிரிவு: நிலைமை இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக நாக சைதன்யாவும், சமந்தாவும் அறிவித்தனர். அதற்கு காரணம் சமந்தாவின் நடிப்புதான் என்று ஒருதரப்பினர் கூறினர். இச்சூழலில் விவாகரத்துக்கு பிறகு சமந்தாவின் சினிமா கிராஃப் பீக்கில் சென்றது. அப்போது மையோசிடிஸ் என்ற நோயும் சமந்தாவுக்கு வந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர்; இப்போது பூரண குணமடைந்து மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன.

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. அதுகுறித்து அமைதியாக இருந்த இருவரும்; இப்போது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களது நிச்சயதார்த்தம் அண்மையில்தான் ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது. விரைவில் அவர்களின் திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாகவும்; அங்கு திருமணம் நடக்க வேண்டும் என்பது சோபிதாவின் ஆசை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: நாக சைதன்யா இரண்டாவது திருமணம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதை அடுத்து; சமந்தாவும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் சமந்தா - நாக சைதன்யாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

அப்போது சமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்யுமாறு நாக சைதன்யாவிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சமந்தா நாக சைதன்யாவிடம், 'நீங்க என்ன நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்கள்' என்று சமந்தா சொல்ல; உடனே லைட்டாக வெட்கப்பட்ட நாக சைதன்யா, 'எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன். நான் உனை காதலிக்கிறேன் சமந்தா' என்று ப்ரோபோஸ் செய்தார். உடனே சமந்தாவோ, 'நீங்க நம்புறீங்களா நான்லாம் நம்பவில்லை' என்று செல்லமாக கலாய்த்தார். உடனே சைதன்யாவோ, மீண்டும் ப்ரோபோஸ் செய்வது மாதிரியான காட்சிகள் அந்த வீடியோவில் இருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அன்யோன்யமா இருந்திருக்காங்க. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X