சமந்தாவின் முடிவு என்ன? நாக சைதன்யா விளக்கம்

Recommended Video

சமந்தாவின் முடிவு என்ன? நாக சைதன்யா விளக்கம்- வீடியோ

ஹைதராபாத்: நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார் என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்குபவர் நடிகை சமந்தா. தமிழ்ப்பெண்ணாக பிறந்து தெலுங்கு மருமகளாக சென்றாலும், தமிழ் ரசிகர்கள் விட்டுகொடுக்கவில்லை. சமந்தா தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று சொல்லும் அளவிற்கு அதிஷ்டம் திறமை இரண்டும் ஒருசேர பெற்றவர். இதனிடையே, 2019 ஆண்டு சினிமாவை விட்டு விலகப்போவதாக செய்திகள் பரவின.

Naga Chaitanya says Samantha wont quit acting!

பரவியவை செய்திகள் அல்ல, அவை வதந்திகள் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா. சமந்தாவுக்கு இப்போது சினிமாவிலிருந்து விலகும் திட்டம் இல்லை. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. கொஞ்சம் இடைவெளி விட்டு நடிப்பார், ஆனால் சினிமாவை விட்டு விலக மாட்டார் என தெரிவித்துள்ளார்.

திருமணமான இளம் தம்பதியரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வானா ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சமந்தா-நாக சைதன்யா நடிக்கின்றனர். ரொமான்ஸ் காட்சிகளுக்கு இயக்குனரின் வழிகாட்டுதல் தேவைப்படாது என சிவா நிர்வானா தெரிவித்திருந்தார்.

சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடித்த சீம ராஜா ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படும் கன்னட படமான யூ டர்னில் சமந்தா நடிக்கிறார். அந்தப்படத்தில் விக்ரம் வேதா கதாநாயகி ஸ்ரதா ஸ்ரீநாத்தின் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இத்திரைப்படத்தை பவன் குமார் இயக்குகிறார்.

சமந்தாவிற்கு தமிழில் இரும்புத்திரை, தெலுங்கில் மகாநதி மற்றும் ரங்கஸ்தலம் என்று சமீபத்திய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாகர்ஜுனாவை போலவே, மிகவும் வெளிப்படையானவர். விமர்சனத்திற்கு பயப்படாதவர் சமந்தா என நாக சைதன்யா புகழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X