மனைவியை கூட்டிக்கிட்டு ஹனிமூன்ல மஜா பண்ணுவாருன்னு பார்த்தா?.. நாக சைதன்யா என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: நடிகர் நாக சைதன்யா கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. தற்போது தனது மனைவியுடன் ஜாலியாக ஹனிமூனில் இருக்கும் நாக சைதன்யா, வெளிநாட்டில் செம ஜாலியாக இருக்கிறார். இப்படியான நிலையில் இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இந்த நேரத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள், அவர்களை விவாகரத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. இதனால் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்து அதன் பின்னர் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
அவர்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. சமந்தா தனது விவாகரத்துக்குப் பின்னர் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இப்போது தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமா என சமந்தா பெரிய ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். ஓடிடி தளங்கள் இவரை இந்தியா முழுவதற்கும் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது செம பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் இயக்குநர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக சமந்தா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சோபிதா: சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சோபிதா துலிபாலா உடன் நாகசைதன்யா டேட்டிங் செய்து வந்தார். இது ஒரு கட்டத்தில் காதலாக மாற, இருவரும் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்கள். அவர்களின் திருமணத்தின் போது பலரது கவனம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மீது தான் இருந்தது.

ஹனி மூன்: இவர்கள் திருமணம் முடிந்த கையோடு நாக சைதன்யாவுக்கு தண்டேல் படத்தின் ரிலீஸ் பணிகளும் படப்பிடிப்பு பணிகளும் இருந்ததால் அவர்கள் ஹனிமூன் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தண்டேல் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர், ஹனிமூன் பிளான் செய்திருந்த அவர்கள் இப்போது ஹனிமூனில் செம ஜாலியாக இருந்து வருகிறார்கள்.
ரேஸ் கார்: இருவரும் ஏற்கனவே டேட்டிங், காதல் என ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டதால், இப்போது இவர்களது ஹனிமூன் ட்ரிப் என்பது வழக்கமான ரொமான்ஸ், தாம்பத்தியம் என மட்டும் இல்லாமல், வேறு விதமாக உள்ளது. அதாவது, நடிகர் நாக சைதன்யா இயல்பிலேயே கார் ரேஸ் பிரியர். இதனால், அவருடன் இணைந்து நடிகை சோபிதா துலிபாலா, ரேஸ் காரை ஓட்டிப் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரவும் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், 'மனைவியை கூட்டிக்கிட்டு ஹனிமூன்ல மஜா பண்ணுவாருன்னு பார்த்தா.. இப்படி ரேஸ் கார் ஓட்டிட்டு இருக்காரே' என கமெண்ட் அடுத்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











