சமந்தா நிலைமை வரக்கூடாதுனு திருமணமான கையோடு சோபிதா துலிபாலா எடுத்திருக்கும் முடிவு இதுவா?
ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக தண்டேல் திரைப்படம் வெளியாகி நூறு கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதற்கிடையே அவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு பிரிந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் அடையாளங்களில் ஒன்று நாகேஸ்வர ராவின் குடும்பம். அவர், அவரது மகன் நாகார்ஜுனா ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடிகர்கள். அதேபோல் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தண்டேல் திரைப்படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தினை சந்தூ மொன்டேட்டி இயக்கியிருந்தார். படம் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருப்பதால் சைதன்யா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சமந்தாவுடன் திருமணம்: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார் நாக சைதன்யா. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே மலர்ந்த காதலுக்கு நாகார்ஜுனா உடனடியாக சம்மதம் தெரிவித்தார். சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார்.
பிரிந்த சைதன்யா: ஆனால் அவர் நடிப்பது நாகார்ஜுனா உள்ளிட்ட நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் நாளடைவில் விவாகரத்தில் முடிந்தது. சமந்தா நடித்தது மட்டுமின்றி அவருக்கு வந்த மையோசிடிஸ் நோயும் இந்தப் பிரிவுக்கு காரணம் என்றும்; தனக்கு வந்த நூறு கோடி ரூபாய் ஜீவானம்சத்தையும் சாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்போதைக்கு தீயாக தகவ்லகள் பரவின.
இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அந்தக் காதலுக்கும் நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்ததால்; அவர்களது திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் திரையுலகத்தை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சோபிதா பற்றி புதிய தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் சோபிதா. ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தன்னிடம் வரும் கதைகளில் முத்த காட்சியோ, நெருக்கமான காட்சியோ இருந்தால் அதனை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துவிடுகிறாராம். ஏற்கனவே சமந்தா கிளாமராக நடித்ததால்தான் குடும்பத்துக்குள் பிரச்னை வந்தது என்று கூறப்பட்டதால் அதனை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த மாதிரியான முடிவை சோபிதா எடுத்திருப்பதாகவும் ஒரு கருத்து பலமாக நிலவிவருகிறது.


Click it and Unblock the Notifications











