2 நடிகைகளுடன் நெருக்கம்.. அதிக படங்களின் வெற்றியால் பொறாமை.. சம்முவை சைதன்யா பிரிய காரணம் இதுதானா?

சென்னை: நடிகை சமந்தாவை அவரது கணவரான நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Samantha Nagachaitanya பிரிவுக்கு Preetham தான் காரணமா? | வைரலாகும் அதிர்ச்சி தகவல்

இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும். 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் பரவிய நிலையில் கடந்த வாரம் இருவரும் தங்களின் விவாகரத்து அறிவிப்பை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் இரண்டம் ஒரே மாதிரியாக இருந்தது. இரண்டிலும் பெயர்கள் மட்டுமே மாறியிருந்ததே தவிர வேறு எந்த விஷயமும் மாறவில்லை. சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சமந்தா படுக்கையறை காட்சிகளில் நடித்து

சமந்தா படுக்கையறை காட்சிகளில் நடித்து

இருவரின் விவாகரத்து குறித்து ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இருவரின் விவாகரத்துக்கும் காரணம் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் 2வில் சமந்தா நடித்ததுதான் என்று பேச்சு எழுந்தது. அந்த சீரிஸில் சமந்தா படுக்கையறை காட்சிகளில் நடித்தது மற்றும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததே காரணம் என கூறப்பட்டது.

கவனம் செலுத்தி வந்தார்

கவனம் செலுத்தி வந்தார்

மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள நாக சைதன்யாவின் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும் அதனை நடிகை சமந்தா ஏற்கமால் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் என்பதால் நாக சைதன்யா குடும்பத்தினர் அவர் மீது கோபத்தில் இருந்ததாகவும் தகவல் வெளியானது.

சமந்தா நடிக்கும் படங்களின் கதை

சமந்தா நடிக்கும் படங்களின் கதை

இந்நிலையில் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கான காரணம் இதுதான் என புதிய காரணம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது நடிகை சமந்தா, கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமந்தா நடிக்கும் படங்களின் கதை தேர்விலும், அவர் யாருடன் நடிக்க வேண்டும் என்பதிலும் கணவர் குடும்பத்தினர் தலையிட்டு உள்ளனர்.

நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை

நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை

இது சமந்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் நடிகை சமந்தா இரவு விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும் நடிகை சமந்தாவும் நண்பர்களாக பழகியதும் நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரண்டு நடிகைகளுடன் நெருக்கம்

இரண்டு நடிகைகளுடன் நெருக்கம்

அதோடு நாகசைதன்யா தன்னுடன் நடித்த 2 நடிகைகளுடன் நெருக்கமாக பழகியதாவும், அந்த நடிகைகளிடம் பேசக்கூடாது என்று சமந்தா தடை போட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நாக சைதன்யா அந்த நடிகைகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதுவும் இருவருக்கும் இடையில் விரிசல் விழ காரணம் என்றும் கூறப்படுகிறது.

நாக சைதன்யாவுக்கு பொறாமை

நாக சைதன்யாவுக்கு பொறாமை

மேலும் நடிகை சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக வலம் வருவது நடிகர் நாக சைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக குடும்பத்திற்குள் இருந்து வந்த பிரச்சனைகளே விவாகரத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X