சமந்தாவிடம் கண்ணீர் விட்ட நாகார்ஜுனா?.. சேகுவேரா என்ன இப்படி சொல்றாரு?.. இப்படியும் நடந்திருக்கா?

ஹைதராபாத்: சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு இருவரும் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். மிக விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. சமந்தா இன்னமும் சிங்கிளாக இருக்கும் நிலையில் அவர் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை திருமணம்வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.

samantha cheguvera nagarjuna

சமந்தாவுக்கு வந்த பிரச்னை: திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது.

குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.

ரீ என்ட்ரி: சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார்.

சேகுவேரா பேட்டி: சூழல் இப்படி இருக்க சமந்தா குறித்து தெலங்கானா அமைச்சர் அவதூறாக பேசினார். அதற்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. இதனையடுத்து வருத்தத்தை தெரிவித்தார்.இந்நிலையில் பத்திரிகையாளர் சேகுவேரா இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தனது முன்னாள் கணவர் வீட்டிலிருந்து வந்த 200 கோடி ரூபாய் ஜீவானம்சத்தை சமந்தா வேண்டாம் என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால் மேலும் 100 கோடி ரூபாய் தருகிறே என சொல்லியும் வேண்டாம் என்றுவிட்டார் சமந்தா. முக்கியமாக நாகார்ஜுனா கண்ணீர் விட்டு கேட்டாராம்.

அப்படிப்பட்டவரை ஒரு அமைச்சர் தரக்குறைவாக பேசுகிறார். இப்போது வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் பேசியது பேசியதுதானே. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X