சமந்தாவுடன் பிரிவு.. செம டிப்ரெஸ்.. மகிழ்ச்சியே இல்லை.. நாகார்ஜுனா ஓபன் டாக்.. ஓஹோ இதுவேறயா?

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக அவர் சோபிதா துலிபாலாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில் சமந்தாவுடன் நாக சைதன்யாவுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து நாகார்ஜுனா பேசியிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனா குடும்பம். நாகார்ஜுனா நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.

samantha naga chaitanya nagarjuna

திருமணம்: இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.

பிரிவு: நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.

அடுத்த காதல்: இருவரும் பிரிந்த பிறகு அவரவர்கள் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலில் அவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார். அவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. விரைவில் அவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நாகார்ஜுனா பேட்டி: இந்நிலையில் நாகார்ஜுனா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாக சைதன்யாவுக்கு முன்பு ஏற்பட்ட பிரிவு அவருக்கோ, குடும்பத்துக்கோ எளிதான நேரமாக இல்லை. முக்கியமாக நாக சைதன்யாவை ரொம்பவே மனச்சோர்வடைய செய்தது. அவர் தனது உணர்வுகளை யாரிடமும் காட்டவில்லை. ஆனாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் எனக்கு தெரியும். ஒருவழியாக இப்போது அவருக்கான மகிழ்ச்சியை தேடி கண்டுபிடித்துவிட்டோம்" என்று குறிப்பிட்டார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், ஓஹோ இப்படியும் நடந்திருக்கா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X