»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் சவ்ரவ் கங்குலியை நான் திருமணம் செய்யப் போவதில்லை என்றுஅடித்துக் கூறுகிறார் நடிகை நக்மா.

சமீப காலங்களில் கங்குலி சரியாகவே விளையாடுவதில்லை என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமானவருத்தம். நக்மாவின் வலையில் அவர் விழுந்து விட்டதுதான் இதற்குக் காரணம் என்று செய்திகளும் பலமாகவெளிவந்தன.

இப்போது கங்கூலியின் மனைவி கர்ப்படைந்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்குமான உறவுகாலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

சமீப காலமாக சொற்ப ரன்கள், ஜீரோ என்று பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டே இருக்கும் கங்குலி,இந்தியாவுக்கும் தோல்விக்கு மேல் தோல்வியாக "அள்ளி வழங்கி"க் கொண்டிருக்கிறார்.

நடிகை நக்மாவுடன் காதல்...காதல்...காதல் மட்டுமே இதற்குக் காரணம் என்றும் அவரலா விளையாட்டில் கவனம்செலுத்த முடியவில்லை என்றும் கிசுகிசுக்கள் வெளிவர ஆரம்பித்தன.

இதனிடையே, இவர்கள் 2 பேரும் திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி என்ற கோயிலில் திருமணமும் செய்துகொண்டுவிட்டனர் என்ற செய்தியும் ஹைலைட்டாக வெளிவந்தது. திருமணம் முடிந்த கையோடு,பத்திரிக்கையாளர்களுக்கு எதுவும் சொல்லாமல் அவர்கள் விரைந்து போய்விட்டனர் என்றும் செய்திகள்பத்திரிகைகளில் வளைய வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் திருப்பதிக்கு வந்த நடிகை நக்மா, பத்திரிகை நிருபர்களிடம் சிக்கிக் கொண்டார்.அவர்களுடைய திருமணத்தைப் பற்றி நிருபர்கள் நக்மாவிடம் கேட்டுத் துளைத்தெடுத்தனர்.

ஆனால், தான் கங்குலியைக் காதலிக்கவும் இல்லை; அவரைக் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமும் தனக்குஇல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டார் நக்மா.

"அவருடன் காளஹஸ்தி வந்தது உண்மைதான். ஆனால், பழங்கதைகள் எல்லாம் இப்போது எதற்கு? இனிமேல்இதுபற்றிப் பேச மாட்டேன்" என்றும் கூறிவிட்டார் நக்மா.

கங்குலியின் மனைவி டோனா, "எனக்கும் என் கணவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. கங்குலி என்னுடன்தான்இருக்கிறார்" என்று கூறியுள்ளார். கங்குலி-டோனா தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: acress, cinema, ganguly, nagma, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil