»   »  தலைவி நக்மா!

தலைவி நக்மா!

Subscribe to Oneindia Tamil

அடுத்த பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் நக்மா.

நக்மா என்றாலே கூடவே சலசலப்பும், பரபரப்பும், சர்ச்சைகளும் ஓடோடி வரும். நடிகையாக இருந்தபோதும் ஏகப்பட்டகிசுகிசுக்களில் சிக்கினார். சரத்குமாருடன் பலமாகவே கிசுகிசுக்கப்பட்டார்.

திடீரென தமிழ் சினிமாவை விட்டு விலகினார். சரத்குமாரை விட்டு விலகியபோது கூடவே ஏகப்பட்ட சொத்துக்களையும் சேர்த்துஎடுத்துக் கொண்டு ஓடி விட்டதாக கூட செய்திகள் வந்தன.

அப்புறம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் மிகத் தீவிரமாககாதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட கிசுகிசுக்கள் எழுந்தன.

அது மறைந்த சில நாட்களிலேயே தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் நக்மா என்ற செய்தி பரவி பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. ஆனால் இதை நக்மா மறுத்தார். இந்த சர்ச்சையும் கொஞ்ச காலத்தில் அங்கிப் போனது.

சமீபத்தில் போஜ்பூரி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் நக்மா. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும்செய்திகள் வந்தன. ஆனால் திடீரென இதை மறுத்தார் நக்மா. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என சொல்ல ஆரம்பித்தார்.

இப்போது அரசியலில் குதித்துள்ளார் நக்மா. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா எம்.பி. தேர்தலில் நக்மா போட்டியிடக் கூடும்எனத் தெரிகிறது. இத்தொகுதிக்கு வருகிற 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடடிக்கெட் கேட்டு மாநிலத் தலைவர் சுபாஷ் யாதவிடம் கோரியுள்ளார் நக்மா.

அவரும் நக்மா பெயரை கட்சி மேலிடத்திற்கு சிபாரிசு செய்துள்ளாராம். டிக்கெட் கிடைத்தால் விதிஷா தொகுதியில் போட்டியிடஆயத்தமாகி வருகிறாராம் நக்மா.

நக்மா எம்.பி. ஆனால் நமக்கெல்லாம் நல்லது தானே!!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil