அம்மா வேடத்தில் நடிக்கும் நக்மா
அம்மாவாக நடிக்கும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் நடிகை நக்மா.
தமிழ்த் திரையுலகை தனது கவர்ச்சியான உடம்பால் ஒரு கலக்குக் கலக்கியவர் நக்மா. வில்லாதி வில்லன் படத்தில்கும்தலாக்கடி தில்லாலே பாடலுக்குப் போட்ட கெட்ட ஆட்டம் செம பிரபலம். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுஇவரைப் பற்றிய பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.
ஆனால் அத்தகைய பரபரப்புகளினாலேயே இவரது மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது. அதோடு நடிப்பிலிருந்துஓதுங்கி மும்பையில் தங்கியிருந்தார். அவரை தனது சிட்டிசன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார் அஜீத்.
போலீஸ் அதிகாரியாக நக்மா மிகவும் மெனக்கெட்டு நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் கேரக்டர் ரோல்களில்ஒரு ரவுண்ட் வரலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் என்ன செய்வது? படம் ஊத்திக் கொண்டது.மீண்டும் மும்பைக்கே சென்று விட்டார்.
இப்போது ஒரு ஹிந்திப் படத்தில் பாபி தியோலுக்கு அம்மாவாக நடிக்கிறார். அனில் ஷர்மா என்பவர் இயக்கத்தில்உருவாகி வரும் ஏபிவாடன் டும் கரே ஹவாலா என்ற படத்தில்தான் இந்த அம்மா வேடம். இதில் கொடுமைஎன்னவென்றால் யாருக்கு அம்மாவாக நக்மா நடிக்கிறாரோ, அவருக்கு நக்மாவை விட வயது அதிகம்.
ஏன் இவ்வளவு சீக்கிரம் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நக்மாவிடம் கேட்டபோது, இந்த வேடத்தைஒப்புக் கொள்ளும் முன்பு நான் 6 மாதம் வரை யோசித்தேன். படத்தில் பாபி தியோலுக்கு தந்தை, மகன் என்றுஇரண்டு வேடம். ஒரு பாபி தியோலுக்கு ஆரம்பத்தில் மனைவியாகவும், பின்பு அம்மாவாகவும் நடிக்க வேண்டும்.
படம் முழுக்க அம்மாவாக நடிக்க வேண்டியதில்லை என்பதால்தான் ஒப்புக் கொண்டேன். மேலும் படத்தில்அமிதாப் பச்சனுக்கு மருமகளாக நடிக்கிறேன் என்பது பெருமைதானே என்று முடிந்த அளவுக்கு நம்மைசமாதானப்படுத்தினார். எப்படியோ அவர் சமாதானம் ஆகியிருந்தால் சரிதான்.


Click it and Unblock the Notifications











