For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நக்மா விரிக்கும் வலை சரத்குமாரின் கஸ்டடியில் கொஞ்ச காலம் ஆஸ்தான நடிகையாக இருந்து பின்னர் அவராலேயே மும்பைக்குவிரட்டியடிக்கப்பட்டவர் நக்மா.தனது தங்கை ஜோதிகா தமிழில் மெல்ல காலூன்றிய காலத்தில் தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த நக்மா தமிழை விட்டுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து இந்திக்குப் போய், அண்டர்வோல்ட் தாதாக்களுடன் லிங்க் ஆகி, கங்கூலியைக் காதலித்து, பின்னர் பெங்களூர்ரவிசங்கர் பாபா ஆசிரமத்தில் சேர்ந்து, திருந்திவிட்டதாகக் கூறிக் கொண்டு, யோகா டீச்சராகி.. இப்படி பல டிவிஸ்ட், டர்ன்ஸ்சுடன்போனது நக்மாவின் பொது வாழ்வு.என்ன தான் ஆனாலும், ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமோ.. இதனால் மீண்டும் தமிழ், தெலுங்கில் சான்ஸ்வேட்டையாடிய நக்மாவுக்கு சில சிங்கிள் டான்ஸ் குத்துப் பாட்டுக்கள் மட்டுமே மிஞ்சின.அதையும் வாரிப் போட்டு ஆடிவிட்டு மீண்டும் மும்பைக்கே போனவர், தாதா லிங்குகளால் கைதாகும் நிலை வரைப் போய்கடைசி நிமிடத்தில் தப்பினார்.இப்போதைக்கு பிரச்சனைகள் எல்லாம் ஓரளவுக்கு அமுங்கிவிட்டதால் மும்பையை விட்டு மீண்டும் இடம் பெயர்ந்துவிடும் மூடில்இருக்கிறார் நக்மா. இதனால் தென்னிந்தியாவை நோக்கி தனது பைனாக்குலரை திருப்பி வைத்து கோலிவுட், டோலிவுட்பக்கமாய் வாய்ப்பு தேடும் வேலையை ஆரம்பித்துள்ளார்.சிவாஜியில் மிக பிஸியாக இருக்கும் ஷங்கர் தனது எஸ் சினிமா கம்பெனி மூலம் நிறைய படங்களை எடுக்கப் போவதாகக்கேள்விப்பட்ட நக்மா, தனது காதலன் பட காலத்து தொடர்பை பயன்படுத்தி, ஏதாவது ஒரு படத்தில் சான்ஸ் வாங்கிவிடும்முயற்சியில் இறங்கியிருக்கிறார்.இதற்காக சென்னை வந்தவர் ஷங்கரையும் மேலும் சில பழைய நட்பு வட்டாரங்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ஷங்கர்கை விரித்துவிட்டதாகவும், மற்றவர்கள் நக்மாவிடம் கொஞ்ச நேரம் கடலை போட்டுவிட்டு, பார்க்கலாம் என்று நம்பிக்கைவார்த்தை சொல்லி அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.சென்னையில் வந்த வேலையை முடித்துக் கொண்டு ஹைதராபாத்துக்குப் போய் அங்கும் பழைய தொடர்புகளை ரினீவ் செய்துபல தயாரிப்புப் பார்ட்டிகளையும் தனியே சந்தித்து சான்ஸ் வலையை விரித்தாராம் நக்மா.அவ்வாறாக சிரஞ்சீயையும் சந்தித்து நக்மா சான்ஸ் கேட்க, தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும்என்று கோரிக்கை வைத்தாராம். பட வாய்ப்பு கேட்டுப் போனால் கல்யாண வீட்டு கலை நிகழ்ச்சியில் ஆடச் சொல்கிறாரே என்றுநொந்துபோன நக்மா, பிற்காலத்தில் உதவுவார் என்று நினைத்து ஆட சம்மதித்துவிட்டாராம்.சென்னைக்கு வந்தது தான் வந்தோம் என்று தங்கை ஜோதிகாவையும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார் நக்மா.தனது பயணத்தை ஏனோ பரம ரகசியமாய் வைத்திருந்தார் நக்மா.

  By Staff
  |

  சரத்குமாரின் கஸ்டடியில் கொஞ்ச காலம் ஆஸ்தான நடிகையாக இருந்து பின்னர் அவராலேயே மும்பைக்குவிரட்டியடிக்கப்பட்டவர் நக்மா.

  தனது தங்கை ஜோதிகா தமிழில் மெல்ல காலூன்றிய காலத்தில் தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த நக்மா தமிழை விட்டுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

  இதையடுத்து இந்திக்குப் போய், அண்டர்வோல்ட் தாதாக்களுடன் லிங்க் ஆகி, கங்கூலியைக் காதலித்து, பின்னர் பெங்களூர்ரவிசங்கர் பாபா ஆசிரமத்தில் சேர்ந்து, திருந்திவிட்டதாகக் கூறிக் கொண்டு, யோகா டீச்சராகி.. இப்படி பல டிவிஸ்ட், டர்ன்ஸ்சுடன்போனது நக்மாவின் பொது வாழ்வு.

  என்ன தான் ஆனாலும், ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமோ.. இதனால் மீண்டும் தமிழ், தெலுங்கில் சான்ஸ்வேட்டையாடிய நக்மாவுக்கு சில சிங்கிள் டான்ஸ் குத்துப் பாட்டுக்கள் மட்டுமே மிஞ்சின.

  அதையும் வாரிப் போட்டு ஆடிவிட்டு மீண்டும் மும்பைக்கே போனவர், தாதா லிங்குகளால் கைதாகும் நிலை வரைப் போய்கடைசி நிமிடத்தில் தப்பினார்.

  இப்போதைக்கு பிரச்சனைகள் எல்லாம் ஓரளவுக்கு அமுங்கிவிட்டதால் மும்பையை விட்டு மீண்டும் இடம் பெயர்ந்துவிடும் மூடில்இருக்கிறார் நக்மா. இதனால் தென்னிந்தியாவை நோக்கி தனது பைனாக்குலரை திருப்பி வைத்து கோலிவுட், டோலிவுட்பக்கமாய் வாய்ப்பு தேடும் வேலையை ஆரம்பித்துள்ளார்.

  சிவாஜியில் மிக பிஸியாக இருக்கும் ஷங்கர் தனது எஸ் சினிமா கம்பெனி மூலம் நிறைய படங்களை எடுக்கப் போவதாகக்கேள்விப்பட்ட நக்மா, தனது காதலன் பட காலத்து தொடர்பை பயன்படுத்தி, ஏதாவது ஒரு படத்தில் சான்ஸ் வாங்கிவிடும்முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

  இதற்காக சென்னை வந்தவர் ஷங்கரையும் மேலும் சில பழைய நட்பு வட்டாரங்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ஷங்கர்கை விரித்துவிட்டதாகவும், மற்றவர்கள் நக்மாவிடம் கொஞ்ச நேரம் கடலை போட்டுவிட்டு, பார்க்கலாம் என்று நம்பிக்கைவார்த்தை சொல்லி அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

  சென்னையில் வந்த வேலையை முடித்துக் கொண்டு ஹைதராபாத்துக்குப் போய் அங்கும் பழைய தொடர்புகளை ரினீவ் செய்துபல தயாரிப்புப் பார்ட்டிகளையும் தனியே சந்தித்து சான்ஸ் வலையை விரித்தாராம் நக்மா.

  அவ்வாறாக சிரஞ்சீயையும் சந்தித்து நக்மா சான்ஸ் கேட்க, தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும்என்று கோரிக்கை வைத்தாராம். பட வாய்ப்பு கேட்டுப் போனால் கல்யாண வீட்டு கலை நிகழ்ச்சியில் ஆடச் சொல்கிறாரே என்றுநொந்துபோன நக்மா, பிற்காலத்தில் உதவுவார் என்று நினைத்து ஆட சம்மதித்துவிட்டாராம்.

  சென்னைக்கு வந்தது தான் வந்தோம் என்று தங்கை ஜோதிகாவையும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார் நக்மா.தனது பயணத்தை ஏனோ பரம ரகசியமாய் வைத்திருந்தார் நக்மா.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X