அக்கா தேவயானி திருமணம்.. தாங்கவே முடியவில்லை.. பல வருடங்கள் கழித்து போட்டுடைத்த தம்பி நகுல்

சென்னை: நடிகை தேவயானி தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர். அவர் தன்னுடைய கரியர் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்துக்கு தேவயானியின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகரும், தேவயானியின் தம்பியுமான நகுல் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தொட்டாச்சிணுங்கி படத்தில் அறிமுகமாகி சூர்ய வம்சம், மூவேந்தர், பாட்டாளி, நீ வருவாய் என எக்கச்சக்க ஹிட் படங்களில் நடித்தவர் தேவயானி. கடைசிவரை கிளாமரே காண்பிக்காமல் நடித்த சில நடிகைகளில் இவரும் ஒருவர். அவர் தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோது; தன்னை வைத்து இரண்டு படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்துக்கு வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியே வந்து மணந்துகொண்டார்.

Nakul on Devayani s Marriage to Rajakumaran What Matters Is That She s Happy Today
Photo Credit:

நிம்மதியான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான தேவயானி; ராஜகுமாரனுடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவருகிறார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் ஒருவர் இனியா. அவர் பாடகியாக ஃபேமஸ் ஆகி; விரைவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில் நடிகரும், தேவயானியின் சகோதரருமான நகுல் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்.

Also Read
எல்லாம் ரெடி.. ராகவா லாரன்ஸ் வந்தால் போதும்.. எந்த துறை அமைச்சர் தெரியுமா?.. இப்படி அடிக்கிறாங்களே
எல்லாம் ரெடி.. ராகவா லாரன்ஸ் வந்தால் போதும்.. எந்த துறை அமைச்சர் தெரியுமா?.. இப்படி அடிக்கிறாங்களே

நகுல் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "என் அக்காவுடைய முடிவின் போது ஒரு தம்பியாக கோபமும் வருத்தமும் ஏற்பட்டது இயல்புதான். அந்தக் காலத்தில் எனக்கு இதுமாதிரியான விஷயங்களை புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இல்லை. ஆரம்பத்தில் என்னுடைய அக்கா எடுத்த முடிவு எனக்கு தாங்க முடியாத அதிர்ச்சியை கொடுத்தது. அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என எனக்கு தெரியவில்லை. காலம் கடந்த பிறகுதான் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அளவு நான் முதிர்ச்சியடைந்தேன்.

மகிழ்ச்சியா? இல்லையா?: அக்கா இப்போது அவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது மட்டும்தான் எனக்கு இப்போது முக்கியம். என் அக்காவுடைய கணவர் ராஜகுமாரன் நல்ல மனிதர். எப்போது சந்தித்தாலும் என்னிடம் நன்றாகவே பேசுவார். மரியாதையாக நடந்துகொள்வார். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்" அவ்வளவுதான் விஷயம்" என்றார்.

நகுலின் கரியர்: நகுல் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி; காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் ஹீரோவாக மாறினார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X