ஹீரோயின்

By Staff

கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் நளதமயந்தி படத்தில் நடிக்க தமயந்தி கிடைத்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பெண் கேரக்டர் தான் தமயந்தியின் பாத்திரம்.

இதற்காக வெப்சைட்களிலும் கூட கமல் விளம்பரம் தந்தார். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இலங்கைத் தமிழ் பெண் யாரும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மலையாள நடிகை கீது மோகன் தாஸையே அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டார் கமல்.

இதில் மாதவனுக்கு மலையாள இளைஞரின் பாத்திரம். சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு மலையாள இளைஞன்ஆஸ்திரேலியாவுக்கு சாப்ட்வேர் வேலைக்குப் போகிறார். அங்கு தான் தனது காதலியைச் சந்திக்கிறார்.

ரன் படத்தில் மலையாள நடிகை மீரா ஜாஸ்மீனுடன் ஜோடி சேர்ந்தார் மாதவன். படம் ஹிட். எனவே, கீதுவுடன் சேர்ந்து நடிக்கும்இந்தப் படமும் தனக்கு வெற்றிப் படமாகும் என சென்டிமெண்டலாக நினைக்கிறார் மாதவன்.

மலையாளப் பெண்ணாக இருந்தாலும் கீது வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான். டொரான்டோ பல்கலைக்கழகத்தில்நடிப்புத்துறையில் பட்டம் பெற்றவர். மலையாளத்தில் "சேஷம்" என்ற படத்தில் பெண் சினிமா டைரக்டராக நடித்துள்ளார்.

"நளதமயந்தி" படத்துக்கான பைனான்ஸ் பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கதை- திரைக்கதை கமலுடையது. படத்தைஇயக்கப் போவது மெளலி.

இந்தப் படத்தில் கமலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி வேறு யாருமல்ல, சிம்ரன் தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X