அவரோட மூச்சுக்காத்து கூட நடிகைகள் மீது படாது.. நம்மல மீறி அது நடக்குமா.. நளினி ஓப்பன் டாக்
சென்னை: பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான அநீதிகள் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக திரையுலகில் நடிகைகள் முதல் துணை நடிகைகள் என பலரும் பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இதுபோன்ற சிக்கல்களில் பெரிய நடிகர்களின் பெயரும் அடிபடுவது உண்டு. குறிப்பாக ஸ்டார் நடிகர்களே கூச்சப்படாமல் எங்களிடம் இதை கேட்பார்கள் என பல நடிகைகள் மறைமுகமாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அப்படி எந்தவொரு சீண்டலும் செய்யாமல் கிசுகிசுக்களில் சிக்காமல் ஒருவர் இருந்திருக்கிறார்,. கன்னியம் நேர்மை கட்டுப்பாடு என்றால் அவர்தானாம். அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம் என பிரபல நடிகையும் தெரிவித்திருக்கிறார்.
உயிருள்ளவரை உஷா படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நளினி. இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் படங்கள். 14 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் சூப்பர் ஸ்டார்களுடன் ஹீரோயினாக, தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார். பிறகு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராமராஜனும் மனைவியை விட்டு பிரிந்தாலும் ஒரு தகப்பனாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து வருகிறார் ராமராஜன்.
கணவன் மனைவியாக இருக்கும்போதே பல முட்டல்களும் மோதல்களும் நீடிக்கின்றன. திருமண பந்தத்தில் இருந்து பிரிந்த பிறகும் இருவருக்குமான உறவு நல்ல முறையில் இருப்பதை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். நளினியை பார்த்து பொறாமை எண்ணம் கொண்டவர்களும் அதிகம் இருக்கின்றனர். 90களில் தெய்வ படங்களில அதிகம் நடித்தவர் நளினி. பிறகு திருமண வாழ்க்கையில நடந்த சோகத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பினார். இவர் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது. நளினிக்கு வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் பெயரும் புகழையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது.
ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளில் தோன்றினாலும், தற்போது முழு நீள சீரியல் நடிகையாகவே மாறிவிட்டார். இந்நிலையில், நடிகை நளினி இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் குறித்து பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக டி. ராஜேந்தரை பற்றி சொல்வதென்றால் காதலுக்கு பாடம் எடுத்தவர். காதல் படம் என்றால் அது டி.ஆர். தான். வசனத்தில் மட்டும் அவர் கில்லி அல்ல, அண்ணன் தங்கை பாசம், அப்பா அம்மா பாசம், அப்பா மகன் பாசத்தை தமிழ் சினிமாவில் ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார். ஒருவர் அனைத்து துறைகளிலும் செஞ்சூரி அடித்தவர் டி.ஆர் மட்டுமே. இசை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடிப்பு என அவர் தொடாத துறைகளே இல்லை.
டி.ஆர் படங்களுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் பெண்கள் அவரை வட்டமடிக்க தொடங்கினர். அவர் இயக்கிய படங்களை காண ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் வந்து ரசித்திருக்கின்றனர். டி.ராஜேந்தர் தனக்கென்று தனி பாணியை உருவாக்கியவர். காதலில் மென்மையும் இருக்கிறது. சோகமும் இருக்கிறது என்பதை தொட்டால் சுடும் என்ற உணர்வை கொடுத்தவர். காதலிக்க வயது தேவையில்லை இவரது படங்களை பார்த்தால் போதும் மனது அலைபாய தொடங்கிவிடும். ஆனால், இவர் பேசுவது சர்ச்சையாகியிருக்கின்றன. பெண்களை எப்போதும் மதிக்க கூடிய மனிதராக இருந்திருக்கிறார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களை கொஞ்சமும் தொட்டு பார்க்காத கன்னியமானவராக இருந்திருக்கிறார் என்பதை கேட்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பாலியல் தொல்லை: சினிமா உலகில் 80களில் மட்டும் அல்ல இன்று வரையிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றனர். இதில், சிலர் தைரியமுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறுகின்றனர். சிலர் குடும்ப சிக்கல்களில் அவஸ்தைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களால் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகின்றனர். இதில், தயாரிப்பாளர் முதல், நடிகர்கள் வரை பலரது பெயர்கள் அடிபட தொடங்கும். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாதுஆண்களும் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.

மூச்சுக்காத்து கூட படாது: இந்நிலையில், நடிகை நளினி அளித்த பேட்டியில் எனது இயக்குநர் டி.ஆர். சார் என் மூச்சுக்காற்று அவர் கையில் பட்டாக்கூட அம்மா மூச்சை அடக்கி வைச்சுக்க என் கையில் படுது என தெரிவிப்பார். அப்படிப்பட்ட மனிதர். அவரை என் தந்தை, குரு, நல்ல மனிதர் அதற்கும் மேலே சொல்லலாம். இங்கு பலபோர் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், டி.ராஜேந்தர் மூச்சு காத்து கூட நடிகைகள் மேல் படாது என நளினி தெரிவித்திருக்கிறார். எனக்கு அவர் கிடைத்தது மிகப்பெரிய கிஃப்ட் ஆக பார்க்கிறேன் என நளினி தெரிவித்துள்ளார்.
யார் அந்த ஜென்டில்மேன்?: நான் பணியாற்றிய அனைத்து நடிகர்களும் ஜென்டில்மேன் தான். நான் சொல்வது சினிமாவில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இடத்திலும் நடக்கிறது. கல்லூரி, பள்ளிக்கூடம், வேலை பார்க்கும் இடம் என அனைத்திலும் பாலியல் ரீதியான பிரச்னைகள் இருப்பதாக நளினி கூறினார். பின்பு பேசிய அவர், முன்பை விட இப்போது பெண்கள் ரொம் ஸ்ட்ராங்கா இருக்காங்க. ஒருத்தன் பாக்குற பார்வையிலேயே தெரிந்து விடும் அவன் நம்மல எப்படி பாக்குறான்னு. பெண்கள் எப்போதுமே சக்தி நிறைந்தவர்கள் அவர்களிடம் ஆண்கள் வேலையை காட்ட நினைத்தால் சும்மா விடமாட்டாங்க என நளினி தெரிவித்தார்.
நம்மளை மீறி தொட முடியாது: பெண்களை ஏன் இவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நம்மை மீறி யாராலும் தொடமுடியாது. முடியுமா தொட்டுத்தான் பார்க்க சொல்லுங்க. இது நடக்குதான்னு எனக்கு தெரியலை; ஆனால், பெண்கள் எல்லோரும் ரொம்ப பவரா இருக்காங்க நிறைய விசயங்களை பேசுறாங்க. எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள் என நளினி தெரிவித்தார். நீங்கள் தைரியமாக இருந்தால் உங்களை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். இருக்கும் வாழ்க்கையை கெட்டியாக பிடித்துகொண்டு மேலே வர துணிவு வேண்டும் என நம்பிக்கையான பதிலை தந்திருக்கிறார் நளினி.

நடிகர்களிடம் கற்றுக்கொள்கிறேன்: பின்னர் சின்னத்திரை குறித்து பேசிய அவர், இப்போது சின்னத்திரை நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். எப்படி நடந்துக்கொள்வது, யாரிடம் எப்படி பேசுவது என்பதை பார்க்கிறேன். குறிப்பாக சம்பளத்தை எப்படி பெறுவது என்பதை கூட சாதுர்யமாக தெரிந்துகொள்கிறேன் என நளினி தெரிவித்தார். பெண்ணாக பிறந்தது பெருமையாக நினைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











