காசு கொடுத்தால் தான் ஹனி.. வாயை மூடிட்டு இருந்தாதான் மனைவி.. நமிதா கணவர் சொல்றதை பாருங்க!

சென்னை: 43 வயதாகும் நடிகை நமிதா தனது கணவருடன் இணைந்துக் கொண்டு அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருந்து வருகிறார். தற்போது அவர் கணவருடன் எடுத்து வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குஜராத்தின் சூரத்தில் பிறந்த நடிகை நமிதா தெலுங்கில் கடந்த 2002ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் சியான் விக்ரம், கிரண் நடித்து வெளியான ஜெமினி படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜெமினி படத்தில் அடுத்த ஆண்டு ஹீரோயினாக நமிதா நடித்திருந்தார்.

namita heroine

2004ம் ஆண்டு விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டிராஜ், வடிவேலு, ஸ்வர்ணமால்யா, லால் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டில் அறிமுகமான நமிதா விஜய், அஜித், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

அர்ஜுனா அர்ஜுனா அம்புவிடு அர்ஜுனா: கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் விளைவிக்காமல் நடித்த நமிதாவுக்காக தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி பாடல்கள் உருவாகின. சரத்குமாரின் ஏய் படத்தில் இடம்பெற்ற அர்ஜுனா அர்ஜுனா அம்புவிடு அர்ஜுனா, தருவியா தரமாட்டியா தரலேன்னா உன் பேச்சுக் கா உள்ளிட்ட பாடல்கள் நமிதாவை ரசிகர்களின் மச்சானாகவே மாற்றியது.

காமசூத்ரா நைட்ஸ்: தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த நமிதா 2008ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான கில்மா படமான காமசூத்ரா நைட்ஸ் படத்திலும் நடித்திருந்தார். அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ஜகன் மோகினி, இளமை ஊஞ்சல், பொட்டு என பல படங்களில் நடித்த நமிதா சினிமாவில் மார்க்கெட் குறைந்த நிலையில், அரசியல் பக்கம் ஒதுங்கினார்.

காசு கொடுத்தால் தான் ஹனி: கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அந்த தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கர்ப்ப வயிற்றுடன் நமிதா எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் தீயாக பரவின. இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக கணவருடன் சேர்ந்துக் கொண்டு ஜாலியாக ரீல்ஸ் போட்டு வரும் நமிதா லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள வீடியோவில் காசு கொடுத்தால் தான் ஹஸ்பண்ட் ஹனியாக தெரிவார் என நமிதா சொல்ல அதற்கு அவரது கணவர் கொடுத்த கவுன்ட்டர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

வாயமூடிட்டு இருந்தால் தான்: மனைவி எப்போ க்யூட்டாக இருப்பாங்க தெரியுமா? அவங்க மியூட்டா இருந்தாதான் என நமிதாவின் கணவர் அந்த ரீல்ஸ் வீடியோவில் பேசி ஸ்கோர் செய்துவிட்டார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரொம்ப தைரியமான ஆளா இருப்பார் போல நமிதா கணவர் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X