ட்வின்ஸ் குழந்தையை பெற்றெடுத்ததும் நமீதா எப்படி மாறிட்டாருன்னு பாருங்க.. குஷ்பு கமெண்ட் வேற!

சென்னை: நடிகை நமீதா ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், தனது தோற்றம் தற்போது எப்படி இருக்கு என வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மட்டுமல்ல ஏகப்பட்ட பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

அஜித்தின் பில்லா, விஜய்யின் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி புயலாக நடித்து வந்த நமீதா வீரேந்திரா என்பவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஹாய் மச்சான்ஸ்

ஹாய் மச்சான்ஸ்

2002ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. 2004ம் ஆண்டு விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் ஏய், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார். ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என அழைப்பதை வழக்கமாக கொண்ட நமீதாவின் அடையாளமாகவே அது மாறி விட்டது.

41 வயதில் கர்ப்பம்

41 வயதில் கர்ப்பம்

சினிமா, அரசியல் என பிசியாக இருந்த நமீதா வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதை பேபி பம்ப் போட்டோஷூட் நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நமீதா 41 வயதில் கர்ப்பமாக ஆனதை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ட்வின்ஸ்

ட்வின்ஸ்

நடிகை நமீதாவுக்கு ஒரு குழந்தை இல்லை ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்ததை அறிந்த ரசிகர்கள் மேலும் சந்தோஷப்பட்டனர். இரு குழந்தைகளுடன் கணவனும் மனைவியும் கோயிலுக்கு வந்த வீடியோவை நமீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய ஏகப்பட்ட லைக்குகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

சூப்பர் ஸ்லிம்

சூப்பர் ஸ்லிம்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நடிகை நமீதா நடத்திய பேபி பம்ப் போட்டோஷூட்டில் எல்லாம் பயங்கர பருமனாக இருந்தார். இந்நிலையில், வயிற்றில் இருந்த இரு குழந்தைகளையும் வெற்றிகரமான வெளியே எடுத்த நிலையில், நடிகை நமீதா சூப்பர் ஸ்லிம்மாக மாறியுள்ள போட்டோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பு கமெண்ட்

குஷ்பு கமெண்ட்

அந்த போட்டோவை பார்த்து இன்பதிர்ச்சி அடைந்த நடிகை குஷ்பு தன்னை போலவே சூப்பர் ஸ்லிம்மாக மாறிவிட்டாரே நமீதா என நினைத்து 'Cutie Pie' என கமெண்ட் போட்டுள்ளார். மேலும், நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி விஜய், விஜே அங்கனா உள்ளிட்ட பலரும் நமீதாவின் இந்த சமீபத்திய புகைப்படத்திற்கு கமெண்ட் போட்டுள்ளனர்.

பவ் பவ் வெளியாகுமா

பவ் பவ் வெளியாகுமா

கடைசியாக தமிழில் பரத்தின் பொட்டு படத்தில் வில்லியாக நடித்த நமீதா தெலுங்கில் கடந்த 2020ல் மியா எனும் படத்தில் நடித்து இருந்தார். மேலும், நாயை மையமாக வைத்து உருவாகி வந்த பவ் பவ் (Bow Bow) படத்திலும் நடித்து வந்தார். ஆனால், அதற்குள் கர்ப்பமாகி குழந்தை பிறந்த நிலையில், அந்த படம் இன்னமும் வெளியாகமலே உள்ளது. மீண்டும் நமீதா நடிப்பாரா? அந்த படம் வெளியாகுமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X