»   »  விஜய் ஜோடியாக நமீதா

விஜய் ஜோடியாக நமீதா

Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக இளம் நடிகர் ஒருவருடன் ஜோடி போடுகிறார் நமீதா.

விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பெருசுகளுடன் மட்டுமே நடித்து வந்த நச் நமீதா முதல் முறையாக சின்னவயசு ஹீரோ ஒருவருடன் ஜோடி போடுகிறார்.

எங்கள் அண்ணா படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நமீதா. அதன் பிறகு சரத்குமார், சத்யராஜ் போன்ற பெரியதலைகளுடன் அடிக்கடி ஜோடி போட்டு அசத்தி வந்தார். அடுத்த வரிசை நடிகரான ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில்ஜோடி போட்டார்.

தற்போது முதல் முறையாக ரொம்ப சின்ன வயசு ஹீரோவுடன் இணையவுள்ளார் நமீதா. இளைய தளபதிவிஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் 2வது நாயகியாக நமீதாவை புக் பண்ணியுள்ளனராம். இந்தப் படத்தில்சிவாஜி புகழ் ஷ்ரியாதான் ஹீரோயின்.

ஷ்ரியாவே திகட்டத் திகட்ட கவர்ச்சியில் திளைக்க வைப்பார் என்றாலும் கூடுதலாக நமீதாவையும் கூட்டணியில்சேர்த்துள்ளார் இயக்குநர் பரதன். விஜய், சூர்யாவை வைத்து வெற்றிப் படமான ஃபிரண்ட்ஸ் படத்தைக் கொடுத்தஅப்பச்சன்தான் அழகிய தமிழ் மகன் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த தனக்கு விஜய் படம் கிடைத்ததால்ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக துள்ளலோடு கூறுகிறார் நமீதா.

இப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தைக் கூட பாதியாக குறைத்துக் கொண்டாராம் நமீதா. வழக்கமாகஅவர் ஒரு படத்திற்கு 15 லட்சம் வாங்குவாராம். விஜய் படம் என்பதால் அதை அப்படியே பாதியாக்கிவிட்டாராம்.

2வது நாயகியாக நடித்தாலும் அதுகுறித்துக் கவலைப்படவில்லையாம் நமீதா. ரசிகரக்ள் யாரை ரசிப்பார்கள் என்றுஎனக்குத் தெரியாதாக்கும் என்று அதற்கு நமட்டலான புன்னகையுடன் விளக்கம் தருகிறார்.

அதுவும் நியாயம்தான், நமீதா ஸ்கிரீனில் வருகையில் விஜய்யையே கூட யாரும் பார்க்க மாட்டார்கள்தான்!

Read more about: namitha in vijays film
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil