»   »  நமீதாவின் ஏக்கம்!

நமீதாவின் ஏக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சிக் கடல் நமீதாவின் மனதின் ஒரு ஓரமாக சின்ன ஏக்கம் எட்டிப் பார்க்கத்தொடங்கியிருக்கிறதாம். ஏக்கத்தை நிறைவேற்றப் போவது யாரோ என்று அவரதுஅகல மனசு அலை பாய்ந்து வருகிறதாம்.

எங்க அண்ணா படத்தில் நடித்த நமீதாவைப் பார்த்தபோது இதோ இன்னொரு மும்பைநாயகி என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தடாலடி கவர்ச்சியில் நமீதாகுதித்தபோதுதான் அவரது பிரமாண்டம் அத்தனை பேருக்கும் புரிந்து புல்லரித்துப்போனார்கள்.

அதன் பிறகு நடந்தது வரலாறு. இன்று ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு நமீதாஉசந்து போயுள்ளார். திகட்டத் திகட்ட அவர் கொடுக்கும் கிளாமர் விருந்தை உண்டு,மயங்கிக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.

கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதாவின் வாரிசு ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார் நமீதா. சில்க்மறைந்து விட்டாலும் கூட அவரது இடத்திற்கு சரியான ஒரு நடிகை இதுவரைவரவில்லை என்பதே உண்மை. மும்தாஜ் அந்த இடத்தைப் பிடிப்பார் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பீல்டு அவுட் ஆகி விட்டார்.

இப்போது நமீதாதான் அந்த இடத்திற்கு உள்ள ஒரே போட்டியாளர். சில்க்ஸ்மிதாவுக்குத்தான் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அதிக அளவில்விசிறிகளாக இருந்தனர். அதே போலத்தான் இப்போது நமீதாவுக்கும் ஆண்களைப்போலவே பெண்களும் கணிசமான அளவுக்கு ரசிகைகளாக உள்ளனராம்.

தினசரி அவருக்கு ஏராளமான இமெயில்கள் ரசிகர்களிடமிருந்து வருகிறதாம்.அவர்களில் பெண்களும் கணிசமாக உள்ளனராம். அவர்கள் அனைவருமே நமீதாவின்உடல் அழகையும், நடிப்பையும் புகழத் தவறுவதில்லையாம்.

அதில் நிறையப் பெண்கள் நமீதாவுக்கு அட்வைஸ்களை அள்ளித் தெளிக்கிறார்களாம்.உங்கள் உடல் அழகு அம்சமாக உள்ளது, நல்ல கெட்டப்புடன் இருக்கிறீர்கள், சரிதான்.ஆனால் அதை அப்பட்டமாக காட்டி நடிப்பது சரியாக இல்லையே, கிளாமரைகுறைத்துக் கொள்ளக் கூடாதா என்று உரிமையோடு கேட்கிறார்களாம்.

கிளாமரோடு நல்ல நடிப்பையும் கொடுக்கும்படியான கேரக்டர்களில் நடித்தால்எங்கேயோ போய் விடுவீர்கள் என்றும் உசுப்பேத்தி விடுகிறார்களாம். இந்தமெயில்களைப் படித்து படித்து இப்போது நமீதாவுக்கு நன்றாக நடிக்கவும் வேண்டும்என்ற ஆசை வந்து விட்டதாம்.

அவருக்கு இப்போது உள்ள ஒரே ஏக்கம் பார்வையிழந்த பெண்ணாக முழுப்படத்திலும் நடிக்க வேண்டும் என்பதுதானாம். இந்த ஏக்கம் இப்போது பெரிதாகிக்கொண்டே இருக்கிறதாம். இதனால் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம்எல்லாம் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறாராம்.

ஒரேடியடியாக தோலைக் காட்டிக் கொண்டிருந்தால் அலுத்துப் போய் விடும்(யாருக்கு?), எனவே நடிப்புடன் கூடிய கிளாமர் ரோல்களில்தான் இனிமேல் நடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் நமீதா.

நமீதாவின் ஏக்கத்தைத் தணிக்கப் போவது யாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil