»   »  தாராள நமீதா!

தாராள நமீதா!

Subscribe to Oneindia Tamil

நமீதாவின் உருவம் மட்டும் பெரிதில்லை, அவரது மனசும் ரொம்பப் பெரிசுதான். கிளாமரை தாராளமாக வாரிவழங்குவதைப் போல, அனாதை இல்லங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு காசையும் அள்ளிக்கொடுக்கிறாராம்.

அரேபியக் குதிரையின் உயரம், கோதுமையின் நிறம், மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிக்கும் பேரழகு என இளவயசுப் பசங்களை பெருமூச்சுக் கடலில் மிதக்க வைக்கும் நமீதா, தமிழ் சினிமா கண்டெடுத்த கிளாமர் சுரங்கம்.

அள்ள அள்ளக் குறையாத வைரம் போல, நமீதாவிடமிருந்து கிளாமரை அள்ளி அகழ்ந்தெடுத்துக்கொண்டுள்ளனர் கோலிவுட் இயக்குநர்கள்.

பெரிய மனசுக்காரியான நமீதா, கிளாமர் காட்டுவதில் மட்டும்தான் தாராளம் என்றில்லை. கை நிறைய பணத்தைஅள்ளிக் கொடுப்பதிலும் பெரும் வள்ளலாக இருக்கிறார்.

சமீப காலமாக, தனது பிறந்த நாள் உள்ளிட்ட விசேஷங்களின்போது ஏதாவது ஒரு அனாதை ஆசிரம் அல்லதுதொண்டு நிறுவனத்திற்கு துண்டு உடையுடன் கிளம்பி விடுகிறார் நமீதா.

அங்குள்ள சிறுவர்கள், முதியோரிடம் பாசமாக பேசிப் பழகும் நமீதா, அந்த அமைப்புகளுக்கு தாராளமாகநிதியுதவியையும் வாரி வழங்குகிறாராம்.

கிளாமரை கணக்கில்லாமல் அள்ளிக் கொடுப்பதைப் போல நிதியுதவியையும் படு தாராளமாக கொடுப்பதால்அவரது கவனத்தை ஈர்க்க பல தொண்டு நிறுவனங்களும், அனாதை ஆசிரமங்களும் ஆர்வம் காட்டுகின்றன.

நமீதாவும் தன்னிடம் உதவி நாடு வருவோருக்கு ஏமாற்றம் தராமல் தாராளமாக உதவி அவர்களதுவாழ்த்துக்களையும் வாரிக் கொள்கிறாராம்.

தன்னைத் தேடி வருவோருக்கு மட்டுமல்லாமல், அவராக தேடிப் போயும் உதவிகளைச் செய்து அசத்திவிடுகிறாராம் நமீதா.

தற்போது நமீதா நடித்து வரும் வியாபாரி, அழகிய தமிழ் மகன் ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்கரைபுரண்டோடுகிறதாம் இந்த ராஜஸ்தான் கிளாமர் ராஜாளி.

குறிப்பாக வியாபாரியில் நமீதாவின் கேரக்டரை வைத்துத்தான் படத்துக்கு விளம்பரமே செய்யப்போகிறார்களாம். இதேபோல விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அழகிய தமிழ் மகனிலும்கவர்ச்சியில் பெரும் புரட்சிசெய்கிறாராம்.

உண்மையிலேயே நமீதாவுக்கு பெரிய மனசுதான்!

Read more about: namithas donates generously
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil