»   »  சுந்தருக்கு டூ விட்ட நமிதா!

சுந்தருக்கு டூ விட்ட நமிதா!

Subscribe to Oneindia Tamil

சுந்தர்.சி.க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நமீதா தவற விட்டுள்ளார். எல்லாம் கரன்சியால் வந்த வினையாம்!

வின்சென்ட் செல்வா, சுந்தர்.சியை ஹீரோவாகப் போட்டு பெருமாள் என்ற படத்தை இயக்கவுள்ளார். தற்போது சுந்தர்.சி நடித்து வரும் வீராப்புபடத்தை முடித்து விட்டு பெருமாளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இப்படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்க நமீதாவைக் கேட்டிருந்தனர். நடிக்க ஒப்புக் கொண்ட நமீதா, திடீரென குண்டக்க மண்டக்க சம்பளம்கேட்டுள்ளார். இல்லையே, இதில் பாதியைத்தானே வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தயாரிப்பாளர் தரப்பு குழம்பிப் போய் நமீதாவிடம்கேட்டுள்ளது.

அது அப்ப, இப்ப இப்படித்தான் என்று நமீதா நச்சென்று கூறியுள்ளார். அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பு, இல்லீங்கக்கா, அம்புட்டுக்குகட்டுப்படியாகுதுங்க என்று கூறி விட்டு கிளம்பி விட்டனராம்.

சுந்தர்.சியுடன் நடிக்க விருப்பம் இல்லாமல்தான் நமீதா அதிக சம்பளம் கேட்டு கழன்று கொண்டு விட்டதாக கோலிவுட் தரப்பு கூறுகிறது.இப்போதெல்லாம் இள வயசு ஹீரோக்களுடன் ஜோடி போடவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம் நமீதா.

தனுஷ், சிம்பு கூட ஜோடி போடக் கூட நமீதா ரெடியாம். இதற்காக சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறாராம்.அப்படித்தான் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார். சம்பளத்தையும் குறைத்துக் கொண்டார்.

விஜய் பட வாய்ப்பு வந்தபோது, சில படங்களில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்ததாம். ஆனால் விஜய்யே போதும் என்று நினைத்த நமீதா, அந்தப்படங்களை நிராகரித்து விட்டாராம். அழகிய தமிழ் மகனில் மெயின் ஹீரோயின் ஷ்ரியா என்பது பழைய செய்தி.

அழகிய தமிழ் மகனில் விஜய்யுடன் ஒரு அஜக் குத்துப் பாட்டுக்கு அலேக்காக ஆடியுள்ளாராம் நமீதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil