»   »  இம்சிக்கும் நமீதா

இம்சிக்கும் நமீதா

Subscribe to Oneindia Tamil

இயக்குநர்களுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தி வருகிறாராம் நமீதா.

கோலிவுட்டின் செக்ஸ் சிம்பல் நமீதாவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுவதே இல்லை. கிளாமரை அள்ளிப் போட்டு வசூலைப்பின்னிடலாம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

ஆனால் நமீதாவை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களிடம் போய்க் கேட்டால் அவரைப் பற்றி வண்டி வண்டியாய் புலம்புகிறார்கள். குறிப்பாகவின்சென்ட் செல்வாவிடம் போய் கேட்டால், அழாத குறையாக குமுறுகிறார்.

விஜய்யை யூத், பிரியமானவளே என இரு படங்களைக் கொடுத்தவர்தான் செல்வா. தனது அடுத்த படமான பெருமாளுக்காக நமீதாவிடம்கால்ஷீட் கேட்டுள்ளார் செல்வா. நடிக்கிறேன், ஆனால் 22 லட்சம் ரூபாய் சம்பளமாக தர வேண்டும் என்று முதல் குண்டைப் போட்டுள்ளார் நமீதா.

அய்யோடா என்று அரண்டு போன செல்வா, பேசாமல் திரும்பி வந்து விட்டார். நமீதாவுக்கு வழக்கமான சம்பளமே 10 லட்சத்துக்குள்தான்,இன்னும் சரியாக சொல்வதானால் 8 தான் தருகிறார்களாம். ஆனால் இப்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்து வருவதால்,இவராகவே சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

என்னம்மா இவ்வளவு சம்பளம் என்று பயந்து போய் கேட்பவர்களிடம் அழகிய தமிழ் மகன் வந்தவுடன் எனது ரேஞ்சே மாறிப் போகும், ரேட்டும்கூடிப் போகும், இப்போதே புக் பண்ணுபவர்களுக்குத்தான் 22. அதற்குப் பிறகு வருபவர்களுக்கு டபுள் அமவுண்ட் கேட்பேன் என்றுதெனாவட்டாக கூறுகிறாராம்.

செல்வாவைப் போலவே மேலும் மூன்று இயக்குநர்களும் நமீதாவை அணுகி மூக்குடைந்து திரும்பியிருக்கிறார்களாம்.

நமீதாவை தொடர்ந்து அவரது காதலர் பரத்கபூர்தான் இயக்கி வருகிறார். அவர் சொல்படிதான் நமீதா ஆடுகிறார், பேசுகிறார் என்றும் இயக்குநர்கள்புலம்புகிறார்கள்.

எப்போது பார்த்தாலும் நமீதாவுடன் ஒட்டிக் கொண்டே வரும் பரத்கபூர், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அலம்பத் தவறுவதில்லையாம். நமீதாவுக்குஇணையான வசதிகளை அவரும் கேட்டு அரித்தெடுக்கிறாராம்.

சமீபத்தில் ஒரு எப்.எம். நிலையம் நமீதாவை சிறப்பு விருந்தினராக வரவழைத்து காலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. பரத்தும் வழக்கம் போலவேஅட்டாச்டாக வந்திருந்தார். ஆனால் அவரை ரெக்கார்டிங் ரூமுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனராம்.

இதனால் கடுப்பான பரத், நிகழ்ச்சி இயக்குநரிடம் காச் மூச் என்று கத்தியுள்ளார். அப்படியும் ஒன்றும் நடக்காததால் கடுப்பாகி அங்கிருந்து திரும்பிவிட்டாராம்.

இப்போது நமீதா கையில் வியாபாரி, அழகிய தமிழ் மகன் மட்டுமே உள்ளதாம். ஏற்கனவே அவர் நடிப்பதாக இருந்த காவல், மாயா ஆகிய இருபடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன.

நமீதா தனது பந்தாக்களையும், படுதாக்களையும் குறைத்துக் கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். உடம்பைக் குறைப்பதை விடஉடும்பு போல கூடவே வரும் பரத்தை கட் செய்தாலே போதும், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள் கோலிவுட் விவரஸ்தர்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil