சுந்தர்.சி ஜோடி நமீதா
பிரம்மப் பிரயத்தனப்பட்டு நமீதாவின் கால்ஷீட்டை வாங்கி விட்டார் இயக்குநர் வின்சென்ட் செல்வா. சுந்தர்.சிக்கு ஜோடியாக திருமால் என்ற படத்தில் நடிக்கத்தான் இந்த கால்ஷீட்டாம்.
படத்துக்கு முதலில் பெருமாள் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்போது திருமால் என்று பெயரை மாற்றி விட்டனர்.இப்படத்தில் நடிக்க 2 மாதங்களுக்கு முன்பே நமீதாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் செல்வா. அவரும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஒரு மாத கால்ஷீட்டையும் கொடுத்தார்.
இந்த நிலையில் திடீரென நமீதாவின் அன்புக்குரிய பரத் கபூர் குறுக்கிட்டு அப்புறம் பார்க்கலாம் என சொல்லிடுமாறு நமீதாவிடம் ஓத, அவரும், வின்சென்ட் செல்வாவைக் கூப்பிட்டு அப்புறம் பார்க்கலாமே என்று கூறியுள்ளார்.
கடுப்பாகிப் போன செல்வா, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார், பத்திரிக்கையாளர்களையும் கூப்பிட்டு நமீதாவைக் காய்ச்சி எடுத்தார். இதையடுத்து செல்வாவுக்கு ஒ.கே. சொல்லி விட்டாராம் நமீதா.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஏகப்பட்ட கோக்குமாக்குகள் ஆகிப் போனதால்தான் சென்டிமென்ட்டாக படத்தின் பெயரை திருமால் என மாற்றி விட்டாராம் செல்வா.


Click it and Unblock the Notifications