»   »  நமீதாவின் மிஸ் 2007

நமீதாவின் மிஸ் 2007

Subscribe to Oneindia Tamil

நமீதா மார்க்கெட்டில் அடை மழை பெயவது போல தெரிகிறது.

ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நமீதா இப்போதுஇந்தியாவில் தயாராகும் ஆங்கிலப் படங்களிலும் வரிசையாக நடிக்கஆரம்பித்துள்ளார்.

சூரத் தந்த சூப்பர் தேவதையான நமீதா மாயா என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஊட்டியிலேயே உருவாகி வருகிறது. நமீதாவின்லூட்டியைப் பார்த்து ஷூட்டிங்கில் ஊட்டி மக்கள் ஜொள்ளு விட்டவண்ணம்உள்ளனர்.

இந் நிலையில் மிஸ் 2007 என்ற பெயரில் இன்னொரு ஆங்கிலப் படத்திலும்நடிக்கவுள்ளார் நமீதா. ஆத்தா நடித்துள்ள நீ வேணுண்டா செல்லம் விரைவில் ரீலீஸ்ஆகவுள்ளது.

இதுதவிர காவல், அழகான பொண்ணுதான் ஆகிய படங்களில் நமீதா தான் நாயகிஇதைத் தொடர்ந்து ஜிஎம்ஜி கிரியேட்டிவ் எஸ்டாபிளிஷ்மென்ட் என்ற பட நிறுவனம்தயாரிக்கும் மிஸ் 2007 படத்தில் நடிக்கவுள்ளார் நமீதா.

லண்டன், பிரிமிங்காம், மான்செஸ்டர், ஸ்காட்லாண்ட் என முழுக்க முழுக்கஇங்கிலாந்திலேயே படப்பிடிப்பு நடக்கப் போகிறதாம். இந்தியாவில் காஷ்மீர் மற்றும்பெங்களூரில் ஷூட்டிங் நடக்கவுள்ளது.

படத்தை யார் இயக்கப்போவது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.நாகேஷ் குக்னூர் அல்லது சேகர் கலா ஆகியோரில் ஒருவர் படத்தை இயக்கலாம்என்கிறார்கள்.

தொடர்ந்து ஆங்கிலப் படங்கள் வந்தாலும் தமிழை விடப் போவதில்லையாம் நமீதா.தமிழ் ரசிகரக்ளுக்கு போர் அடிக்கும் வரை தொடர்ந்து தமிழ் திறையைநிறைப்பாராம்.

அவ்வளவு சீக்கிரம், தமிழ் ரசிகர்களுக்கு நமீதா போர் அடித்துப் போய் விடுவாராஎன்ன?

Read more about: namitha miss 2007

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil