ப்பா.. என்னவொரு ரொமான்ஸ்.. கணவருடன் கவர்ச்சி உடையில் பிரெக்னன்ஸி போட்டோஷூட் நடத்திய நமீதா!
சென்னை: தனது 41வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நடிகை நமீதா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு பேபி பம்ப் தெரிய அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் நடிகை நமீதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நமீதா கர்ப்பம்
விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனவர் நடிகை நமீதா. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நமீதா சமீப காலமாக நடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். வீரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா சமீபத்தில் தனது 41வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் கர்ப்பமாக இருக்கும் அறிவிப்பை புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தார்.

கருப்பு நிற உடையில்
கருப்பு நிற உடையில் தனது பேபி பம்ப் முழுவதும் தெரியும் விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருந்தார் நடிகை நமீதா. மேலும், தாய்மை வரம் கிடைத்தது தனக்கு பெரிய பாக்கியம் என்றும், தனக்குள் ஒரு உயிர் வளர்வது சந்தோஷத்தை கொடுக்கிறது என கேப்ஷன் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

கணவருடன்
அந்த போட்டோஷூட்டில் தனியாக நின்று நமீதா போஸ் கொடுத்திருந்த நிலையில், எங்கே உங்கள் கணவர் என ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது கணவருடன் எடுத்துக் கொண்ட பிரெக்னன்ஸி போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா.

வெள்ளை நிற கவர்ச்சி உடையில்
கருப்பு நிறத்தில் பேபி பம்ப் காட்டி போட்டோஷூட் நடத்திய நமீதா, தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் தனது கணவர் வீரேந்திர செளத்ரி உடன் செம ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். கருப்பு நிற ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து கொண்டு தாடியுடன் செம ஹேண்ட்ஸம் ஆக போஸ் கொடுத்துள்ளார் வீரேந்திரா.

குட்டி நமீதா
கூடிய விரைவிலேயே குட்டி நமீதா வர வாழ்த்துக்கள் என ரசிகர்கள் பலரும் நடிகை நமீதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருவரும் செம ஜோடி ரொம்பவே அழகாக இருக்கீங்க, குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க வாங்க என நமீதாவிடம் சில ரசிகர்கள் கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











