For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  41 வயசுல கர்ப்பமான நமீதா.. இதைவிட சந்தோஷமான பர்த்டே இருக்க முடியாது.. ’பேபி பம்ப்’ காட்டி பூரிப்பு!

  |

  சென்னை: தென்னிந்தியாவின் கவர்ச்சி கன்னி நடிகை நமீதா எங்கேப்பா ஆளே காணோம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சத்தமே இல்லாமல் தான் அம்மா ஆகப் போகும் சந்தோஷமான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  நடிகை நமீதா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தனது பேபி பம்ப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  இது பற்றி அறிந்ததும் நமிதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படம்... முக்கிய அப்டேட் இதோ! ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படம்... முக்கிய அப்டேட் இதோ!

  நமீதா

  நமீதா

  விஜயகாந்த், பிரபுதேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ள நடிகை நமீதா தமிழ்நாட்டின் கனவுக் கன்னியாகவே இருந்து வந்தார்.

  மச்சான் என ஆசையோடு

  மச்சான் என ஆசையோடு

  அஜித்தின் பில்லா, விஜய் உடன் அழகிய தமிழ் மகன், பார்த்திபனின் பச்ச குதிர உள்ளிட்ட படங்களில் செம ஹாட்டாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்தவர் நடிகை நமீதா. ரசிகர்களை மச்சான் என அன்போடு அழைத்து அனைவரது இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் நமீதா.

  பிக் பாஸில் நமீதா

  பிக் பாஸில் நமீதா

  பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை நமீதா போட்டியாளராக கலந்து கொண்டார். ஹைஜீன் எந்தளவுக்கு ரொம்ப முக்கியம் என்பதை டாய்லெட்டை அவர் க்ளீன் பண்ணும் போதே ரசிகர்கள் புரிந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா குறைந்த நாட்களிலேயே வீட்டுக்குள் இருந்தாலும் ரசிகர்களின் அன்பை அதிகமாகவே பெற்றார்.

  அதிமுக டு பாஜக

  அதிமுக டு பாஜக

  சினிமா, சின்னத்திரை என அசத்தி வந்த நடிகை நமீதாவுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அந்த கட்சியில் இருந்து விலகிய நமீதா கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார். சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டாமல் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் நமீதா.

  நடிகருடன் திருமணம்

  நடிகருடன் திருமணம்

  நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பு, அரசியல் என ஆர்வம் காட்டி வந்த நடிகை நமீதா கடந்த 2017ம் ஆண்டு நடிகர் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜாலியாக கணவன், மனைவி இருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நமீதா நகர்ந்துள்ளார்.

  நமீதா கர்ப்பம்

  நமீதா கர்ப்பம்

  இன்று நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அதிகாலையிலேயே தனது பேபி பம்ப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தாய் ஆகப் போகும் சந்தோஷமான செய்தியை பகிர்ந்துள்ளார் நடிகை நமீதா. கருப்பு நிற கவர்ச்சி உடையில் கர்ப்ப வயிற்றை காட்டியபடி உஷ் என விரல் வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

  பிறந்தநாள் பரிசு

  பிறந்தநாள் பரிசு

  பிறந்தநாள் அதுவுமாக ரசிகர்களுக்கு சிறப்பான பரிசு கொடுத்துள்ளார் நடிகை நமீதா என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். மேலும், தனக்குள் இன்னொரு உயிர் உருவாகி தாய்மை நிலையை அடைந்தது புதிய மாற்றங்களை உணர்ந்தது குறித்தும் உருக்கமாக போஸ்ட் போட்டு ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் நமீதா.

  English summary
  Namitha announces her pregnancy and shares baby bump photos on her 41st birthday trending in social media. Tamil Cinema fans send their birthday wishes and congratulates for her pregnancy announcement.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X