கல்யாணம் ஆகியும் கவர்ச்சியைக் கைவிடாத நமிதா: இந்தியாவின் கிம் கர்தாஷியன்

சென்னை: கவர்ச்சியாக ஆடையணிய திருமணம் தடையில்லை என சொல்லாமல் சொல்கிறார் நமிதா.

"மச்சான்ஸ்..." என்ற வார்த்தையை வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நமிதா. விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சரத்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.

Namitha compared with Kim Kardashian!

கடவுள் எனக்கு எல்லாவற்றையும் அதிகமாகக் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லும் நமிதா கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்தார். எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க தயங்கியதில்லை.

தொடர்ச்சியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த நமிதாவுகு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பிறகு ரியாலிட்டி ஷோக்களுக்கு ஜட்ஜாக வர ஆரம்பித்தார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற நமிதா " பாத்ரூம் இப்படித்தான் கழுவணும்... " எனக் காந்தக்குரலில் கிளாஸ் எடுத்தது வைரலானது. நடிகர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்துகொண்டார். தற்போது பெங்களுருவில் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களிலோ தொலைக்காட்சிகளிலோ தலைகாட்டவில்லை. அடுத்ததாக பார்வதிபுரா என்ற கன்னட படம் ரிலீசாக உள்ளது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு மச்சான்ஸை மனங்குளிரச் செய்கிறார்.

சமீபத்தில் இறுக்கமாக உடையணிந்து வெளியிட்ட புகைப்படத்திற்கு திருமணத்திற்குப் பிறகும் இப்படியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும், கிம் கர்தாஷியனை விட நீங்கதான் அழகு என சிலர் புகழ்ந்து தள்ளுகின்றனர். கவர்ச்சிக்கு கல்யாணம் ஒரு தடையா...? நமிதா எப்பவும் நமிதாதான் என்று சொல்லாமல் சொல்வதுபோல் அவர் செழிப்பாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X