எத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்
Recommended Video

சென்னை: திருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூற வேண்டும்.
கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நமீதா திருமணத்திற்கு பிறகு அகம்பாவம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
இந்த படத்தில் நமீதாவுக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கிடையாது.

நமீதா
அகம்பாவம் படத்தை இயக்குகிறார் சத்ரபதி பட புகழ் ஸ்ரீமகேஷ். வாராகி வில்லனாக நடிக்கும் இந்த அரசியல் சார்ந்த படத்தில் நமீதா நேர்மையான பத்திரிகையாளராக நடிக்கிறாராம். கவர்ச்சி காட்டாமல் நியாயம், நேர்மைக்காக கோபத்தை காட்டும் பெண்ணாக நடிக்கிறார் நமீதா. நமீதாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசை
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க பல நடிகைகள் விரும்புகிறார்கள். இந்நிலையில் நமீதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் நல்ல பெயர் எடுப்பார் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் நமீதா.

அரசியல்
பெண் பத்திரிகையாளர் மற்றும் ஒரு அரசியல்வாதி இடையே நடக்கும் போர் தான் அகம்பாவம் படத்தின் கதையாம். சத்ரபதி படத்தை போன்று இந்த படத்திலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீமகேஷ் என்று தெரிவித்துள்ளார் நமீதா. நமீதாவை இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்தது இல்லை.

வசனம்
நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை முதலில் படமாக்குகிறோம். அந்த காட்சியில் எனக்கு 30 பக்க வசனங்கள் உள்ளது. அந்த வசனங்கள் அழகாக வர வேண்டும் என்பதால் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் இந்த படத்தில் நானே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளேன் என்று நமீதா கூறியுள்ளார். படத்தில் அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து, நாடோடிகள் கோபால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











