'காதல் கல்லூரி'யில் நமீதா!

தெலுங்கில் நமீதா நடித்து வரும் படம் லவ் காலேஜ். இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமீதா. கவர்ச்சிகரமான பாத்திரத்தில் மட்டுமல்லாமல், அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் நமீதா.
இதற்காக மெனக்கெட்டு தனது உடல் பொலிவையும் கூட்டி, தேவையற்ற கொழுப்பைக் கைவிட்டு டிரிம்மாகி அசத்தலாக காணப்படுகிறார்.
இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாராம் நமீதா.
இது கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம்.
விரைவில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications