வெல்த் முக்கியமில்லே... ஹெல்த்தான் முக்கியம் மச்சான்ஸ் - நமீதா
சென்னை: அழகிய பெண்கள் எதைச் சொன்னாலும் வேத வாக்குதான். அதுவும் உண்மையைச் சொன்னால் அப்படியே கேட்டுக் கொள்வதில் ஆட்சேபணை ஏது...
நமீதா இப்போது சொல்லியிருக்கும் புதிய தத்துவம், பணம் இருக்கா இல்லியாங்கிறது முக்கியமில்லே... ஹெல்த் நல்லாருக்கான்றதுதான் முக்கியம் என்கிறார்.

தூக்கத்தைக் கெடுத்த நமீதா
6 அடிக்கு மேல் உயரம், அதற்கேற்ற புஷ்டியான அழகுடன் நடிக்க வந்த நமீதாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற, ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணித்தார்கள் பத்திரிகையாளர்கள். ஏய் என்ற படத்தின் வெற்றி விழாவில் ஒரு பத்திரிகையாளர் நமீதாவிடம், 'நேத்து உங்கள படத்தில் பார்த்ததிலிருந்து தூக்கமே வரலீங்க' என்றார். அதற்கு அர்த்தம் புரிந்தும் புரியாமலும், அச்சா.. நைஸ் என்று சிரித்தார் நமீதா.

ஃபிட்டான நமீதா
ஆனால் அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே நமீதாவின் உடல் எடை கூடிவிட்டது. ஆனாலும் அதற்காக அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பிரமாண்ட உருவத்துடன் கடை திறப்பு, ஈமு கோழிப் பண்ணை திறப்பு என்று பிஸியாகவே இருந்தார்.
ஒரு கட்டத்தில் ஃபிட்னெஸ் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தினார். மருத்துவ உதவி, உடற்பயிற்சி என ஏகப்பட்ட முயற்சிகளால், இப்போது சட்டென்று பழைய நமீதாவாக மாறிவிட்டார்.

சினிமா.. அரசியல்...
சினிமாவில் நடிப்பது, தயாரிப்பது என ஒருபக்கம் மும்முரமாக இருக்கும் நமீ, இன்னொரு பக்கம் அரசியலில் குதிக்கவும் சந்தர்ப்பம் பார்த்து வருகிறார்.

ஃபிட்னெஸ் சென்டர்..
சமீபத்தில் சென்னை நெசப்பாக்கத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி மையத்தைத் திறந்து வைத்தார் நமீதா. ஃபிட்னெஸ் என்பதன் அர்த்தம் தெரிந்த நமீதா வந்து இந்த மையத்தைத் திறப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று அதன் உரிமையாளர்களே ஆசைப்பட்டு அழைத்தார்களாம். பெண்களுக்கான இந்த ஃபிட்னெஸ் சென்டருக்குப் பெயர் 'கீப் இட்'!

ஹெல்த்தான் முக்கியம் மச்சான்ஸ்...
உடற்பயிற்சி மையத்தைத் திறந்து வைத்த பின் நமீதா கூறுகையில், "வெல்த்தியா இருக்கோமா இல்லையா என்பது முக்கியம் அல்ல... ஹெல்த்தியா இருக்கணும்... அதான் முக்கியம். எனவே உடல் நலம் விஷயத்தில் கவனமா இருங்க," என்று ஒரு அட்வைஸையும் தந்துவிட்டுப் போனார்.


Click it and Unblock the Notifications











