நமீதாவிடம் கும்மாங்குத்து வாங்கப் போவது யாரோ!!
சினிமா ஷூட்டிங்கிலிருந்து தற்காலிக ஓய்வெடுத்துக் கொண்டுள்ள நமீதாவின் இப்போதைய ஆர்வம்... குத்துச் சண்டை.
தீவிர பயிற்சிகள் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், ஒரு தேசிய குத்துச்சண்டை சாம்பியனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
எதற்காக இந்தப் பயிற்சி... ஏதாவது படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கப் போகிறாரோ?

மூன்று மாதங்களாக
நமீதாவிடம் கேட்டால், 'இல்லையில்லை.. இதுவும் என் உடற்பயிற்சிகளுள் ஒன்று' என்கிறார். மூன்று மாதங்களாகவே இந்தப் பயிற்சியை எடுத்து வருகிறாராம் நமீதா.

ஓய்வு
நமீதா மேலும் கூறுகையில், "உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காகவே இந்த குத்துச் சண்டைப் பயிற்சியில் ஈடுபடுகிறேன். அடுத்த படத்தில் நடிப்பதற்காக எல்லாம் இல்லை. நடிப்பதில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தேன்.

அடுத்த படம்
நான் அடுத்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போய்விட்டது.

ஆக்ஷன் கதை
எப்படியும் ஜூனில் படம் தொடங்கிவிடும். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும், என்றார்.
இந்தப் படத்தில் நமீதாவிடம் கும்மாங்குத்து வாங்கப் போகிறவர் யாரோ?


Click it and Unblock the Notifications











