சார் நமீதா சார்.. சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துட்டாங்க.. எந்தப் படத்தில் என்ன ரோல் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் தவிர்க்கவே முடியாதவர் நமீதா. பல வருடங்கள் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பெரிய ரவுண்டு வந்த அவர்; தனது மார்க்கெட் சரிந்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமீதா மிஸ் சூரத் பட்டத்தை வென்று கவனத்தை ஈர்த்தார். மாடலிங்கில் கிடைத்த வெளிச்சம் காரணமாக சினிமா கதவுகளும் அவருக்கு திறந்தன. அதன்படி தெலுங்கில் சொந்தம், ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி ஆகிய படங்களில் நடித்தார். டோலிவுட்டில் அவர் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தபோது அவருக்கு எதிர்பார்த்த வெற்றியோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் தமிழில் அவருக்கான சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழில் செம பிஸி: அந்தவகையில் சித்திக் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த எங்கள் அண்ணா படத்தில் அறிமுகமானார் நமீதா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் நமீதாவுக்குவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. முதல் படத்தில் கொஞ்சம்தான் கிளாமர் காட்டியிருந்தார். ஆனால் அதற்கடுத்த படங்களில் உச்சபட்சமாக கிளாமர் ரோல்களை செய்ய ஆரம்பித்தார். இதன் காரணமாக அவருக்கு கோலிவுட்டில் பயங்கர டிமாண்ட் ஏற்பட்டது. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
அர்ஜுனா அர்ஜுனா: முக்கியமாக சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த ஏய் படத்தில் அவர் அர்ஜுனா அர்ஜுனா பாடலில் அணிந்திருந்த காஸ்ட்யூமும், நடன அசைவுகளும் அவரை கிளாமர் ராணியாக மகுடம் சூட வைத்தது. இன்றுவரை அந்தப் பாடலை வைத்து சரத்குமாரை பலரும் கிண்டல் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ராதிகாகூட ஒரு பேட்டியில், 'நமீதாவை மட்டும் சரத்குமார் தூக்கினா. என்னை தூக்கவில்லை' என ஜாலியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட நமீதா: தொடர்ந்து படு பிஸியாக இருந்த நமீதாவுக்கு ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. அதனையடுத்து வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதறகு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் நுழைந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். ஆனால் பாஜகவில் சேர்ந்துவிட்டதால் தமிழ் ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க நமீதா மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.
டயங்கரம் படத்தில் நமீதா: அதாவது யூடியூபர் விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் டயங்கரம் படத்தில் கேமியோ ரோல் செய்திருக்கிறாராம் அவர். இதுகுறித்து சித்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "நேற்று ஒரு சம்பவம் ஷூட்டிங்கில் நடந்தது. ஷூட்டுக்கு நமீதா வந்திருந்தாங்க. ரொம்ப கலர்ஃபுல்லாக இருந்தது. கல்ச்சுரல் ஈவென்ட் ஷூட்டிங் நடந்தது. நீங்கள் நமீதாவை பார்க்கணுமே அய்யோ. உண்மையில் நன்றாக இருந்தது. அவங்க ஒரு கேமியோ ரோல் செய்திருக்காங்க" என்றார்.


Click it and Unblock the Notifications











