விஜய் ஒரு புத்திசாலி.. அவருடன் போட்டி போடுவது பிடிக்கும்..ஓபனாக பேசிய நமீதா

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். தற்போது அவரது அரசியல் பிரவேசம் குறித்து நமீதா ஓபனாக பேசியிருக்கிறார்.


கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Namitha Open Talks about Vijay s Political Entry


GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கமாட்டார்; கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது ஹெச்.வினோத்தின் பெயர் அடிபடுகிறது.

நமீதா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான நமீதா கூறுகையில், “விஜய் மிக மிக புத்திசாலி. அதேநேரத்தில் அரசியலில் ஒரு புத்திசாலியான எதிரியுடன்மோதுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கும், அவரது கட்சி மென்மேலும் வளர்வதற்கும் எனது வாழ்த்துகள்” என முடித்துக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X