என்ன!! நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு!
நடிகை நமிதாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகை நமிதாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
நடிகை நமிதா எங்கள் அண்ணா படம் மூலம் தமிழுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார். இவரின் கோலிவுட் கிராப் என்பது உச்சமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் ஏறி இறங்கிதான் சென்றது.
அஜித், விஜய், சரத்குமார் என்று பெரிய நடிகர்களுடன் இவர் நடித்து இருக்கிறார். முக்கியமாக பில்லா படத்தில் இவர் நடித்தது பெரிய ஹிட் அடித்தது.

பல மொழி
தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். வரிசையாக படங்களில் நடித்து வந்தவர் இடையில் கொஞ்சம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அதேபோல் இவர் கொஞ்சம் ஆன்மீக வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினார்.

அடுத்து என்ன
அதன்பின் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் கொஞ்சம் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். ஓவியா உடன் சண்டை போட்டு இவர் இணையம் முழுக்க கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்தார்.

என்ன திருமணம்
அதன்பின் 2017ல் இவர் தனது நண்பர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். அவ்வளவுதான், மொத்தமாக டிவி, சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் இணையத்தில் இவர் வைரலாக தொடங்கி உள்ளார்.
என்ன போட்டோ
நடிகை நமிதாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவர் சிவப்பு நிற புடவை கட்டி, மிகவும் ஒல்லியாக இந்த போட்டோவில் இருக்கிறார்.குண்டாக இருந்தவர், மொத்தமாக உடலை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இவரின் புதிய லுக்கை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











