»   »  பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள்... நான் பேசுகிறேன்! - நமீதா

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள்... நான் பேசுகிறேன்! - நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆனால் நான் பேசுகிறேன், என்று நமீதா ஒரு படவிழாவில் நமீதா பேசினார்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை​, திரைக்கதை​,​ வசனம், பாடல்கள் எழுதி​ இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'.

Namitha speaks on sexual abusing

இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார்.​ ​ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நமீதா பேசும் போது, "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி.

சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி, அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம். நான் மூன்று நாய்க் குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆனால் நான் பேசுகிறேன், என்று நமீதா ஒரு படவிழாவில் நமீதா பேசினார். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை​, திரைக்கதை​,​ வசனம், பாடல்கள் எழுதி​ இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார்.​ ​ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் நமீதா பேசும் போது, "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி, அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம். நான் மூன்று நாய்க் குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன். ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள், நிறைய பேசுங்கள். இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,'' என்று வாழ்த்தினார்.

ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள், நிறைய பேசுங்கள். இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,'' என்று வாழ்த்தினார்.

English summary
In Saaya audio launch event actress Namitha urges parents to teach children about good touch and bad touch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil