»   »  கருப்பு அங்கியும், நமீதாவும்

கருப்பு அங்கியும், நமீதாவும்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
முதல் முறையாக நமீதா கருப்பு அங்கி போட்டு நீதிபதி முன்பு சட்டப் பிரிவுகளை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்து வாதம் புரியப் போகிறார்.

நமீதா வக்கீலுக்குப் படித்து விட்டாரோ என்று பயந்து போய் விட வேண்டாம். சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ள 1977 படத்தில்தான் வக்கீல் வேடத்தில் நடிக்கப் போகிறாரார் நமீதா.

தமிழ் சினிமாவில் வக்கீல்களும், அவர்களின் வாதங்களும், சிவப்பு நிற கோர்ட் கட்டடங்களும் ரொம்ப பாப்புலர். அதிலும் விதி படம் வந்ததற்குப் பிறகு கோர்ட் காட்சிகள் தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாக அதிகமாகவே இடம் பெற்றன.

பட்டி தொட்டியெங்கும் விதி பட வசன கேசட்டைப் போட்டு தாக்கி வந்தனர். இடையில் சற்றே அதன் தாக்கம் குறைந்திருந்தது.

அப்படிப்பட்ட சிறப்பான கோர்ட் காட்சி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. 1977 படத்தில் பரபரப்பான கோர்ட் காட்சிகள் இடம் பெறவுள்ளதாம்.

அதை விட படு சூடாக நமீதா வக்கீல் வேடத்தில் அசத்தப் போகிறார். சமீப காலத்தில் வக்கீல் வேடத்தில் முன்னணி நடிகைகள் யாரும் நடித்ததில்லை. முதல் முறையாக நமீதாதான் அந்த பெருமையைப் பெறப் போகிறார்.

வக்கீல் வேடம் என்பதால் நீண்ட வசனங்களைப் பேச வேண்டும் என்பதால் இப்ேபாதே அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம் நமீதா. என்னதான் டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டாலும் கூட, சரியான முறையில் வாயசைக்க வேண்டும், முகத்தில் அதற்குரிய உணர்ச்சிகளை காட்ட வேண்டும் என்பதால் மெனக்கெட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறாராம் நமீதா.

சரிதான்!

Read more about: namaitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil