நமீதா 34... நடிச்சது 43!
ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்.
படங்களில் பிஸியாக இல்லாவிட்டாலும், பத்திரிகைகளில், மீடியாவில் அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமில்லை என்பதே அவரது முக்கியத்துவத்தை உணர்த்தும்.

எங்கள் அண்ணா
எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, வியாபாரி, பாண்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து, இளைஞர்களைக் கவர்ந்தார். 2004-2005 ல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவர் நமீதா.

எக்குத்தப்பா கவர்ச்சி
கவர்ச்சியில் முத்திரை பதித்த நமீதா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாகத் திகழ்ந்தார். அத்தனை மொழிகளிலும் கவர்ச்சியில் கலக்கினார். குறிப்பாக இவரும் நயன்தாராவும் இணைந்து நடித்த தெலுங்குப் படங்கள், பில்லா, சிம்ஹா பெரும் வெற்றி பெற்றன.

ஆங்கிலத்திலும்
எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்தில் மாயா ஆன்ட்டியாக புடவையில் கவர்ச்சி காட்டினார்.

மானாட மயிலாட
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து தன் குஜராத் தமிழில் குதூகலப்படுத்தினார்.

குத்துச் சண்டை
நமீதா இப்போது ஒரு கன்னடப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் புதுப்படம் விரைவில் தொடங்குகிறது. இடைப்பட்ட நாட்களை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், குத்துச்சண்டை கற்பதிலும் செலவழித்தார்.

பிறந்த நாள்
குஜராத் மாநிலம் சூரத்தில் மே 10-ம் தேதி பிறந்தவர் நமீதா. சினிமாவில் பரபரப்பாக இருந்த நாட்களில், அவர் தன் பிறந் நாளன்று ஆதரவற்றோருக்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர்கள் கூட கொடுத்திருக்கிறார்.

43 படங்கள்
2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்ற நமீதா முதலில் நடித்தது தெலுங்கில்தான். 2004-ல் தமிழில் எங்கள் அண்ணா நடித்தார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நமீதா, விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கவும் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











