தினமும் நான்கு கிலோமீட்டர் நடந்த நமிதா
இடையில் சில காலம் ஒதுங்கி இருந்த நமிதா தனது ரீ எண்ட்ரி நன்றாக வர வேண்டும் என்று கடினமாக உழைக்கிறாராம். இப்போது நடித்துக்கொண்டிருக்கும் விசி.வடிவுடையானின் பொட்டு படத்தில் அகோரி கேரக்டர்.

சுருட்டு குடித்துக்கொண்டே சுடுகாட்டில் மயான பூஜை செய்து பேய்களை விரட்டும் மந்திரவாதியாக நடிக்கிறார். மாடர்ன் பெண்ணாக இன்னொரு வேடம். இதில் அகோரி கேரக்டர் மேக்கப்புக்கே தினமும் நான்கு மணி நேரம் ஆகிறது.

இந்த படத்திற்காக கொல்லிமலை உச்சியில் இரண்டாயிரம் அடி உயரத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாதாம். தினமும் நான்கு கிலோமீட்டர் நடந்துசென்று அந்த லோகேஷனில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

நமீதாவின் டெடிகேஷனை பார்த்து வியந்திருக்கிறது பொட்டு படக்குழு!
Comments


Click it and Unblock the Notifications