»   »  தா.. தா.. நமீதா..

தா.. தா.. நமீதா..

Subscribe to Oneindia Tamil

நதியாவை வைத்து முன்பு பாட்டு எழுதினார்கள். அப்புறம் ரோஜாவை வைத்தும்வரிகளைப் புணைந்தார்கள். இப்போது நமீதாவை வைத்து வாலிபக் கவிஞர் வாலிபின்னல் வரிகளை போட்டுள்ளார்.

விளையாட்டுப் புள்ளை எஸ்.ஜே.சூர்யா, நச் நாயகி நமீதாவும் இணைந்துவிளையாடும் வியாபாரி படத்தில்தான் இந்த நம நம வரிகளை கொண்ட பாடல் இடம்பெறுகிறது.ஷக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தில் மொத்தம் 3 நாயகிகள். இதில் ஒருவரானநமீதாவுக்கு ஏர் ஹோஸ்டஸ் வேடம். கனவில் அவரும் சூர்யாவும் இணைந்துகண்டக்க மண்டக்க பாடுகிறார்கள்.

இப்பாடலை படு வித்தியாசமாக படமாக்கத் திட்டமிட்ட ஷக்தி சிதம்பரம், கவிஞர்வாலியிடம் அட்டகாசமான ஒரு பாட்டைக் கொடுங்கள் என்று கேட்டாராம்.உடனடியாக பேனாவைத் தூக்கிய வாலி, கபகபவென எழுதிய பாடல்தான் இப்பாடல்.பாடலின் ஆரம்ப வரிகள் இவைதான் ..

தா... தா... நமீதா

தாகம் எடுக்குது தண்ணி தா ..

யா ... யா... சூர்யா

தேகம் முழுக்க உன் ஏரியா ...

பாடல் வரிகளைப் பார்த்த ஷக்தி உற்சாமாகி விட்டாராம்.

இப்படிப்பட்ட வரிகளை வைத்துக் கொண்டு சாதாரணமாக படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக நமீதாவையும், சூர்யாவையும் பின்னிப் பிணைய வைத்துபெடலெடுத்து விட்டார்.

ஐயப்பன்தாங்கலில் வைத்து இந்தப் பாட்டை படமாக்கியுள்ளனர். கார் ஷெட் போலஅமைக்கப்பட்டிருந்த செட்டில் வைத்து இந்தப் பாட்டை சுட்டுள்ளனர். இளசுகளைகுறி வைத்து இந்தப் பாட்டை எழுதியுள்ளார் வாலி. அதுவும் நமீதா, சூர்யாவின்பெயர்களை வைத்தே பாடலையும் எழுதி அசத்தி விட்டாராம்.

பாடல் வரிகளை கேட்ட சூர்யாவுக்கும் ஜாலியாகி விட்டதாம். தலைவா, பாட்டைகலக்கலாக எடுங்க என்று ஷக்தியிடம் கூறினாராம் சூர்யா. நமீதாவும் இந்தப்பாட்டுக்காக படு ஒத்துழைப்பு கொடுத்து கிளாமரை அள்ளி இறைத்து விட்டாராம்.

வயசு ஏற, ஏற வாலிக்கு வாலிபக் குறும்பு ரொம்ப சாஸ்தி ஆயிட்டே போகுதே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil