»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏய் படத்தில் சரத்குமாருடன் நடித்துக் கொண்டிருக்கும் நமிதா தெலுங்கிலும் படு பிஸி. சென்னைக்கும்ஹைதராபாத்துக்குமாக பறந்து கொண்டிருக்கும் நமிதா, மலையாளத்தில் கலைச் சேவை செய்யவிரும்பவில்லையாம்.

ஏன் தெரியுமா? அங்கு தரப்படும் சொற்ப சம்பளம் தான்.

சூப்பர் ஸ்டார்களுக்கே சாப்பாடு போட்டு, சில லகரங்களை மட்டுமே தரும் சேட்டன்கள், ஹீரோயின்களுக்குசம்பளம் தருவதிலும் படு கஞ்சத்தனம் காட்டுவார்கள். இதனால் தான் பிறந்த மண்ணில் நடிக்க நமிதாவுக்குகொஞ்சம் கூட ஆர்வமில்லையாம்.

அதே நேரத்தில் மலையாளத்து டைரக்டர்கள் பிற மொழிகளில் படம் எடுக்கும்போது மட்டும் போய்ப் பேசி அதில்சான்ஸ் வாங்கிவிடுகிறார்.

அப்படித்தான் எங்கள் அண்ணாவில் விஜய்காந்துக்கு ஜோடி சேர்ந்தார். படத்தைஇயக்கிய சித்திக் மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் மலையாளத்தவர் சம்பந்தப்பட்ட படங்களில்நமிதாவுக்கு கட்டாயம் சான்ஸ் கிடைத்துவிடுகிறது.

மும்பையில் பிறந்து வளர்ந்த நமிதாவுக்கு ஒரு பாய் பிரண்டும் இருக்கிறாராம். அவர் பெயர் ஸ்டீபன் கபூர். நமிதாசென்னையில் இருந்தாலும் தைரபாத்தில் இருந்தாலும் பறந்து வந்துவிடுகிறார் கபூர். இருவருமே

ஜாலியாக பொழுதைப் போக்குவது வழக்கம்.

சமீபத்தில் வாரங்கல்லில் நடந்த ஒரு சினிமா சூட்டிங்குக்கு கபூருடன் ஜோடியாகக் கிளம்பினார் நமிதா. அருகில்நமிதாவை வைத்துக் கொண்டு படு வேகத்தில் காரை ஓட்டிய கபூர், எதிரே வந்த கார் மீது மோதியதில் சிறியகாயத்துடன் இருவரும் தப்பி இருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil