»   »  நமீதா.. நமீதா..

நமீதா.. நமீதா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெட்டையழகி நமீதா படு வேகமாக முன்னேறி வருகிறார்.

திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டத் தயார் என்பதால் நமீதாவை நாடும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் வரிசை நீண்டு கொண்டேபோகிறது. இதனால் அவரது கையில் நிறையப் படங்கள்.

ஆணை, சாணக்யா, கர்த்தா, தலைப்புச் செய்தி, இங்லீஷ்காரன், தாதா என கையில் ஏகப்பட்ட தமிழப் படங்களும் தெலுங்குப்படங்களும் வைத்திருக்கிறார்.

தொடர்ந்து இவரது கால்ஷீட் கேட்டு தொல்லை தரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சம்பள விஷயத்தில்இரண்டு விதமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தனது கவர்ச்சி நன்றாகப் போணியாவதால், அதை வைத்து கலக்கல் அறுவடையை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நமீதா,இரண்டு வகையான சம்பளத்தை நிர்ணயித்துள்ளார்.

அதாவது சரத்குமார், அர்ஜூன் போன்ற ஓல்டுகளுடன் நடிப்பதாக இருந்தால் சம்பளம் ரூ. 20 லட்சம் வரை போகிறதாம். அஜீத்,விஜய் போன்ற குட்டிப் பசங்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் சம்பளத்தை அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை தான் பேசுகிறார்.

ஆனால், சம்பளத்தில் பாதியை விட்டுத் தந்தாலும் இளவட்டங்கள் இவரைக் கண்டுகொள்ள தொடர்ந்து மறுப்பதால், மூத்ததலைமுறை நடிகர்களுடேனேயே ஜோடி போட்டு வசூல் ராணியாக ரேஞ்சுக்கு பணம் ஈட்டி வருகிறார் நமீதா.

இந்த ரூ. 20 லட்சம் என்பது அடிப்படை சம்பளம் தான். எக்ஸ்ட்ரா கவர்ச்சி, சூடான காட்சிகள் என பலான காட்சிகளுக்கு தனி ரேட்வைத்துள்ளார். கொஞ்சம் கூடுதலாக உடை களைப்பு என்றால் கொஞ்சம் கூடுதலாக ஊதியம் கேட்கிறார்.

இப்போது இங்கிலீஷ்காரன் படத்தில் சத்யராஜுடன் இவர் அதிகளவில் கலக்கி வருகிறார். இதற்காக எக்ஸ்ட்ரா சம்பளம்தரப்பட்டிருக்கிறதாம்.

தெலுங்கில் இவர் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்த அய்ட்டே எண்டே என்ற படத்தில், 60 கிலோ ரோஜா இதழ்களுக்கு மத்தியில்அடிப்படை உடைகள் மட்டும் அணிந்து இவர் நடித்துள்ள காட்சியால் ஆந்திராவில் நமீதாவுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்ஏற்பட்டுவிட்டதாம்.

இந்தக் காட்சி பிளஸ் படத்தில் ஏகக் கவர்ச்சி கலாட்டா செய்ததற்காக நமீதாவுக்கு ரூ. 5 லட்சத்தை எக்ஸ்ட்ரா போட்டுத்தந்திருக்கிறார்கள்.

இப்போது இந்தப் படத்தை அப்படியே டப் செய்து தமிழில் கொண்டு வரப் போகிறார்கள். வெயிலுக்கு கொஞ்சம் நிழல் தேடிஅலைபவர்கள் இந்த டப்பிங் படத்துக்குச் செல்லலாம். படம் அம்புட்டு குளிறாம்.

இதற்கிடையே தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை படத்தில் எப்படியாவது ஜோடியாகிவிட தீவிரமாய் முயன்று வருகிறார் நமீதா.தனுசுக்கு ஜோடி என்பதால் சம்பளம் ரூ. 10 லட்சம் தந்தால் போதும் என்கிறாராம்.

கூடவே தனது பாய்பிரண்ட் பரத்கபூருக்கு ஹீரோ சான்ஸ் தேடிக் கொண்டிருக்கும் நமீதா, ஒருவேளை அவரை யாராவதுஹீரோவாகப் போட்டு படம் எடுத்தால் இலவசமாகவும், அப்படியே ரொம்ப ப்ரீயாயகவும் நடிக்கத் தயார் என்றுதயாரிப்பாளர்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

தேவைப்பட்டால் படத்துக்கு பைனான்ஸ் பண்ணவும் நமீதா தயார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil