»   »  நமீதாவும் சாணக்கிய மழையும்

நமீதாவும் சாணக்கிய மழையும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாணக்யாவில் சரத்குமாரும், நமீதாவும் மழையில் நனைந்தபடி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்களாம்.

தகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அவருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.

இதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், சம்பளத்தில் பாதியை விட்டுத் தந்தாலும் இளவட்டங்கள் இவரைக் கண்டுகொள்ள தொடர்ந்து மறுப்பதால், மூத்ததலைமுறை நடிகர்களுடேனேயே ஜோடி போட்டு வசூல் ராணியாக ரேஞ்சுக்கு பணம் ஈட்டி வருகிறார் நமீதா.

இந்த ரூ. 20 லட்சம் என்பது அடிப்படை சம்பளம் தான். எக்ஸ்ட்ரா கவர்ச்சி, சூடான காட்சிகள் என பலான காட்சிகளுக்கு தனி ரேட்வைத்துள்ளார். கொஞ்சம் கூடுதலாக உடை களைப்பு என்றால் கொஞ்சம் கூடுதலாக ஊதியம் கேட்கிறார்.

இதே போல தான் சரத்குமாருடன் ஏய் படத்தில் அருவியில் நனைந்து நமீதா போட்ட ஆட்டம் பலரையும் ஏங்க வைத்தது. இதன்ராசியோ என்னவோ, தனது அடுத்த படத்திலும் அதே போல ஒரு சீன் வைக்கும் படி டைரக்டர் ஏ. வெங்கடேஷை நமீதாகேட்டுக்கொண்டாராம்.


இது டைரக்டருக்கு மட்டும் கசக்குமா என்ன? உடனே ஓகே சொல்லி அடுத்த வண்டி பிடித்து யூனிட்டை கேரளாவுக்கு பேக்செய்தார். கேரளாவில் நடுக்காட்டில் மழையில் சரத்குமாரும், நமீதாவும் யானைகளின் நடுவில் செம குத்தாட்டம் போடும்காட்சியை படம் பிடித்துள்ளார்.

இந்த குத்தாட்டமும் ஏய் அளவுக்கு பேச வைக்குமாம்.

தண்ணீருக்கும் நமீதாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil